மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
எந்தவொரு மக்களும் விடுபடாமல்
தரவுகளை முழுமையாக
பதிவேற்றம் செய்ய வேண்டும் என
கணக்கெடுப்பாளர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அறிவுரை.
கிருஷ்ணகிரி. ஜுன். 02. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027
மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
இன்று(02.06.2026) துவக்கி வைத்து
உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
பயிற்சி வகுப்பு
02.06.2026 முதல் 04.06.2026 வரை
மூன்று நாட்கள்
நடைபெற உள்ளது.
15-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு
கடந்த 2011-ல் நடைபெற்றது.
2021-ல் நடைபெறவிருந்த
மக்கள் தொகை கணக்கெடுப்பு
கொரோனா பெருந்தொற்றினால்
தள்ளி வைக்கப்பட்டு
தற்போது
2026-ல் 16-வது மக்கள் தொகை
கணக்கெடுப்பு
முதற்கட்டம் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
ஆகஸ்ட் 01.08.2026 முதல்
31.08.2026 வரை
நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக
Self Enumeration பணி
17.07.2026 முதல் 31.07.2026 வரை
நடைபெற உள்ளது.
16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு
முற்றிலும் டிஜிட்டல் முறையில்
(Paper less) செய்யப்படுகிறது.
கணக்கெடுப்பாளர்கள் தங்கள் சொந்த ஆண்ட்ராய்ட் மொபைல் போனில்
மென்பொருள் பதிவிறக்கம் செய்து
வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மேலும் இம்மக்கள் தொகை கணக்கெடுப்பில்
Self Enumeration முறை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஊரக / நகர (Rural/Urban) பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஊரக பகுதிக்கு
வட்டாட்சியர் Charge Officer-ஆகவும்,
நகரப் பகுதிக்கு
செயல் அலுவலர்,
பேரூராட்சி / ஆணையாளர், நகராட்சி
ஆகியோர் Charge Officer-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒசூர் மாநகராட்சி தவிர்த்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஊரக (8) / நகர (7) Charge Officer-
15 அலுவலர்கள் உள்ளனர்.
நேரடி கணக்கெடுப்பிற்கு
செல்லவிருக்கும் Enumerator மற்றும்
அவர்களை கண்காணிக்கக் கூடிய Supervisor
ஆகிய பணியிடங்களை
உரிய ஆணைகள் வழங்குதல் மற்றும்
பயிற்சிகள் வழங்குதல் ஆகிய
முக்கிய பணிகளை Charge Officer-கள்
CMMS Web Portal வழியாக
மேற்கொள்ள வேண்டும்.
Charge Officer-ன் முக்கிய பணியை
கருத்தில் கொண்டு இந்த மூன்று நாட்கள்
பயிற்சி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, Technical Assistant
இரண்டு நாட்கள் பயிற்சிகள்
வழங்கப்பட்டு விட்டது.
மேலும்,
Enumerator / Supervisor
ஆகியோர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடிய
Field Trainer பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
அனைத்து Charge Officer அலுவலகத்திலும்
Technical Assistant பணியிடம்
நிரப்பப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு
தேவையான அனைத்து
Materials Charge Officer
அலுவலகத்திற்கு நேரடியாக
வந்தடையும் வண்ணம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல்
Charge Officer அலுவலகங்களுக்கு
தேவையான
கணினி,
பிரிண்டர்,
ஆகியவை கொள்முதல் செய்து
வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியை நன்கு பயன்படுத்தி
நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
எந்தவொரு மக்களும் விடுபடாமல்
தரவுகளை முழுமையாக
பதிவேற்றம் செய்ய வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம், இ.ஆ.ப.,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப.,
உதவி வன பாதுகாவலர்
திரு.பசவங் சிங் இ.வ.ப.,
மக்கள் தொகை கணக்கெடுப்பு
உதவி இயக்குநர்கள்
திரு.எஸ்.சஜிலால்,
திருமதி.சஜிதா அஸீஸ்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.எஸ்.கிருஷ்ணன்,
உதவி இயக்குநர் (புள்ளியியல்)
திரு.குப்புசாமி,
துணை ஆட்சியர்(பயிற்சி)
செல்வி.சௌமியா,
பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்
திரு.ஜி.வெங்கடேசன்,
அனைத்து பேரூராட்சி
செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள்,
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
---------------------------------------.