தமிழக முதல்வர் கடந்த 5 ஆண்டுகளில்
ஓசூர் பகுதிக்கு பல தொலைநோக்கு
திட்டங்கள் அறிவித்து
செயல்படுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர்
ஒரே நாளில் தமிழகம் முழுவதும்
தாய்மார்களின் வங்கி கணக்கில்
ரூ.5000 செலுத்தி
அவர் சொல்வதையும் செய்வார்.
சொல்லாததையும் செய்வார்,
என்று நிரூபித்துள்ளார்.
தமிழக முதல்வர்
மீண்டும் முதலமைச்சராக
வரவேண்டும் என்றால்
நீங்கள் அனைவரும் திமுக சின்னமான
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து
வெற்றி பெறச் செய்ய வேண்டும்.-------
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
பரப்புரை
ஒசூர், ஏப்.12:
ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
ஏப்ரல் 11-ம் தேதியன்று
தனது இரண்டாவது நாள்
தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேச்சை கேட்க
திரண்டிருந்த
கன்னடம் மற்றும் தெலுங்கு
மொழி பேசும் மக்களிடையே
கன்னடம், தெலுங்கு
மொழிகளில் பேசி
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு
திமுக தலைவர்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
என்னை அறிவித்துள்ளார்.
அவர் கடந்த 5 ஆண்டுகளில்
ஓசூர் பகுதிக்கு பல தொலைநோக்கு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தியுள்ளார்.
மேலும் இந்தப் பகுதியில் பாலம் தேவை
என்பதை நமது எம்எல்ஏ பிரகாஷ் அவர்கள் கண்டறிந்து உங்களின் கோரிக்கைக்கு
ஏற்ப அவர் பாலம் அமைத்துக் கொடுத்தார்.
மேலும் நமக்குத் தேவையான வசதிகளை
நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்
செய்து கொடுப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பொதுமக்களின் நலன் கருதி
ஒவ்வொரு திட்டமும்
செயல்படுத்தி வருகிறார்.
மேலும் ரூ.8000 கூப்பன் வழங்கும்
இல்லத்தரசி திட்டம் அறிவித்துள்ளார்.
அந்த கூப்பனில் தேவையான வீட்டு உபயோக பொருட்கள் வாஷிங் மெஷின் மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
கலைஞர் உரிமைத் தொகை
ரூ. 1000 வழங்குவேன் என தமிழக முதல்வர்
கூறிய போது அந்தத் திட்டம்
செயல்படுத்த முடியாது
என கூறினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் தமிழக முதல்வர் அதை செயல்படுத்தினார்.
இந்த முறை வெற்றி பெற்றால்
ஆயிரம் என்பதை ரூ.2000 ஆக தருவேன்
என நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தற்போது நான் 2,500தருகிறேன் என கூறுகிறார்.
ஆயிரம் ரூபாய் தர முடியாது என கூறியவர்
2,500 எப்படி தருவார்.
எடப்பாடியால் இந்த திட்டம் செயல்படுத்த முடியாது.
தேர்தல் வரும் முன்பு
மகளிர் உரிமைத் தொகை தரக்கூடாது என நீதிமன்றத்திற்கு எடப்பாடி சென்றார்.
ஆனால் நமது முதல்வர் அதற்கு முன்பாக
ரூ.3000 மேலும் ரூ.2000 என ரூ.5000
ஒரே நாளில் தமிழக முழுவதும்
ஒவ்வொரு தாய்மார்களின்
வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதனால் தான் கூறுகிறேன்...
தமிழக முதல்வர்
சொல்வதையும் செய்வார்
சொல்லாததையும் செய்வார்
எனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்
என்றால் நீங்கள் அனைவரும்
திமுக சின்னமான
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து
வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மேலும் உங்கள் பகுதியின் கோரிக்கைகள்
குறித்து நான் சட்டமன்றத்தில்
பேச வேண்டும் என்றால்
என்னை நீங்கள் ஆதரித்து வெற்றி
பெறச் செய்ய வேண்டும்.
என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓசூர் சட்டமன்றத் தொகுதி
மதசார்பற்ற வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
தெலுங்கு, கன்னடம்
ஆகிய மொழிகளில் பேசி மாநில எல்லையில் உள்ள கிராமங்கள்தோறும் வாக்கு சேகரித்தார்.
இந்த தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில்
ஒன்றிய செயலாளர்
கஜேந்திரமூர்த்தி,
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
வீரபத்திரப்பா,
கோபால்,
இளைஞரணி
கலைச் செழியன்
உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள்
மற்றும் கிராம முக்கியஸ்தர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
----------------------------------------.