நமது முதலமைச்சர்
சொன்னதை எல்லாம்
செய்து காட்டியவர்.
மீண்டும் இரண்டாவது முறை
ஆட்சிக்கு வந்த உடன்
இல்லத்தரசி திட்டத்தில்
ரூ8000 கூப்பன் உடனடியாக
வழங்க இருக்கிறார்.
1000 ரூபாய் கலைஞர் மகளிர்
உரிமைத் தொகையை
2000 ரூபாயாக உயர்த்தி
தர இருக்கிறார்-------
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
வசந்த்நகரில் பரப்புரை
சட்டமேதை
டாக்டர். அம்பேத்கர்
ஏப்ரல் 14-ம் தேதி
பிறந்தநாள் முன்னிட்டு
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர்S.A. சத்யா
அவர்கள்
அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு
மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.
ஒசூர். ஏப். 14. –
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
வசந்த்நகர் மற்றும்
அதைச்சுற்றியுள்ள குடியிருப்புகளில்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வசந்த்நகரில் உற்சாக வரவேற்பு
ஒசூர் மாநகராட்சி வசந்த்நகர் பகுதியில்
வாக்கு சேகரிக்க சென்ற
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்களுக்கு பட்டாசு வெடித்து
மேளதாளங்கள் முழங்க
மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து
ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வசந்த்நகரில் கூடியிருந்த
பொதுமக்களிடையே
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள் பேசியதாவது,
அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே
வணக்கத்துக்குரிய வாக்காள பெருமக்களே
உங்கள் அனைவருக்கும் என்னுடைய
அன்பான வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில்
மதசார்பற்ற முற்போக்கு
கூட்டணியின் வேட்பாளராக
திராவிட முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளராக
ஏன் இந்த பகுதி மக்களின் வேட்பாளராக
போட்டியிடுகின்ற எனக்கு
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து வெற்றி
பெறச்செய்ய வேண்டும் என்று
உங்களை அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்.
நமது முதலமைச்சரை
இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்து
முதலமைச்சராக்க வேண்டும்.
அவர் என்ன செய்ய போகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்.
உங்களுக்கு ஏற்கனவே தெரியும்
நமது முதலமைச்சர் அவர்கள்
என்ன வெல்லாம்
சொன்னாரோ அவற்றை எல்லாம்
செய்து காட்டியவர் தான்
நமது முதலமைச்சர் அவர்கள்.
தற்போது கூட
8000ரூபாய் கூப்பன் தருவதாக சொல்லியிருக்கிறார்.
அந்த 8000 ரூபாய் கூப்பன்
ஆட்சியில் அமர்ந்ததும் உடனே
உங்களுக்கு தர இருக்கிறார்.
அதேபோல
1000 ரூபாய் கலைஞர் மகளிர்
உரிமைத் தொகையை
2000ரூபாயாக உயர்த்தி தர இருக்கிறார்.
இதுபோல எண்ணற்ற திட்டங்களை
கொண்டு வந்து செயல்படுத்த இருக்கிறார்.
ஒசூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு
உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள் வாக்கு சேகரித்தார்.
---------------------------------------.