ஓசூரில் திமுக வேட்பாளருக்கு
மைசூர் பேட்டா ,
ஆளுயர மாலை அணிவித்து
மலர்கள் தூவி
உற்சாக வரவேற்பு
நாலேட்ஜ் காரிடருக்காக
விவசாய நிலங்களை அரசு எடுத்து கொள்கிறது என்ற பொய்யை நம்பாதீர்கள்
நாலேட்ஜ் காரிடாருக்காக
விவசாயிகளின் நிலம்
ஒரு சென்ட் கூட போகாது,
நமது முதலமைச்சர் கூறுவதை நம்புங்கள்
திமுக வேட்பாளர் மேயர் S.A. சத்யா
தெலுங்கு மொழியில் பேசி
வாக்கு சேகரிப்பு
ஓசூர், ஏப்.18:
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்
திமுக வேட்பாளராக போட்டியிடும்
மேயர் S.A. சத்யா
அவர்கள் ஏப்ரல் 17-ம் தேதியன்று
திப்பேப்பள்ளி, ஆபிரி, சுண்டட்டி, ஆலூர், தின்னூர், கதிரேப்பள்ளி, மோரனபள்ளி, சாமனப்பள்ளி
ஆகிய கிராமங்களில் கூட்டணி கட்சியினரோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாத்தில்
வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டு
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கதிரேப்பள்ளி கிராமத்தில் அவருக்கு
கிராம மக்கள் மலர்கள் தூவி
சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து அவருக்கு
மைசூர் பேட்டா
(கர்நாடகா தொப்பி)
மற்றும் கருப்பு சிவப்பு வண்ணத்தில்
ஆளூயர மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பளித்தனர்.
வாக்காளர்களிடையே
தெலுங்கு மொழியில் பேசி
திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
அப்போது இந்த பகுதியில்
நாலேட்ஜ் காரிடார் என்ற அறிவுசார் மையம் வருகிறது.
விவசாய நிலங்களை அரசு எடுத்து கொள்கிறது என ஒரு பொய்யை கூறி வருகின்றனர்.
தயவுசெய்து அதனை நம்பாதீர்கள்
நமது முதல்வர் அனைத்து விவசாயிகளையும் அழைத்து பேசியுள்ளார்.
இந்த பகுதியில் நாலேட்ஜ் காரிடாருக்காக விவசாயிகளின் நிலம்
ஒரு சென்ட் கூட போகாது,
நமது முதலமைச்சர் கூறுவதை நம்புங்கள்
அதிமுக உள்ளிட்ட மற்றவர்கள் கூறுவதை நம்பாதீர்கள்.
சொல்வதை செய்யும் திமுக அரசு ,
சொல்லாததையும் செய்யும் திமுக அரசு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதத்திற்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.
தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள
காலை உணவுத் திட்டம், 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும்.
முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.
5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
முதலமைச்சரின் மருத்துவக்
காப்பீட்டுத் தொகை ரூ10 லட்சம் வரை அதிகரிக்கப்படும்
என பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.