ஒசூர் மாநகராட்சி
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
ஒசூர் மறைவட்ட முதன்மை குரு
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
தளாளர் மற்றும் முதல்வர்
கல்வி தந்தை
அருட்பணி பெரிய நாயகம்
அவர்களின்
குருத்துவ பணியில்
31ஆண்டுகள் நிறைவு விழா
ஆலய சவுண்ட் சிஸ்டம் பணிக்கு
அருட்பணி பெரியநாயகம் அவர்கள்
தனது குடும்பத்தார் சார்பில்
ரூ.1 லட்சம் வழங்கினார்.
ஒசூர். ஏப். 26. –
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரியில் அமைந்துள்ள
நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த
பிரசித்தி பெற்ற
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஒசூர் மறைவட்ட முதன்மை குரு,
மத்திகிரி செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளியின்
தாளாளர் - முதல்வர்
கல்வி தந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்களின்
குருத்துவ பணியில்
31 ஆண்டுகள் நிறைவு விழா
சிறப்பு திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்கு
உட்பட்ட மத்திகிரி
குதிரைப்பாளையத்தில்,
1924-ம் ஆண்டு கட்டப்பட்ட
நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்
மற்றும் மத்திகிரி நேதாஜி நகரில்
25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள
புதிய ஆலயம்
ஆகிய இரு ஆலயங்கள்
அமைந்துள்ளது.
பாரம்பரிய ஆலயம்
2016-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியன்று மத்திகிரியின் பழைய ஆலயம்
மறைமாவட்ட பாரம்பரிய ஆலயமாக
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதே ஆண்டு மத்திகிரி புனித
ஆரோக்கிய அன்னை ஆலயத்தின்
பங்கு தந்தையாக
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள் பொறுப்பேற்றார்.
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
பங்குதந்தையாக
திருப்பணி ஆற்றத்தொடங்கிய
நாள் முதலே
மத்திகிரியில் குறைந்த கட்டணத்தில்
உலகத்தரம் வாய்ந்த
பள்ளிக்கூடத்தை திறந்து,
அருட்பணியுடன் இணைந்து
கல்விசேவையும் ஆற்ற கடும் முயற்சியை மேற்கொண்டார்.
அதன்பயனாக
மத்திகிரியில்
2016-ம் ஆண்டு ஜுன் மாதம்
செயின்ட் சேவியர் அகாடமி
பள்ளியை(CBSE) தொடங்கி அதன்
தாளாளர் மற்றும் முதல்வராக
கல்விதந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள் சிறப்பாக
நிர்வகித்து வருகிறார்
என்றால் மிகையில்லை.
குறைந்த கட்டணத்தில்
நிறைந்த சேவை
குறிப்பாக மத்திகிரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த கல்வி கட்டணத்தில் தரமான CBSE கல்வியை வழங்கும் வகையில்
இந்த செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியை
ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவாக்கி இருக்கிறார்.
இது மத்திகிரி மக்களுக்கு மட்டுமின்றி
ஒசூர் மாநகராட்சி மக்களுக்கே ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
குறிப்பாக
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து
இங்கு பயிலும் மாணவர்களுக்கு
பசுமையான,
சுகாதாரமான சுற்றுச்சூழலை
ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அதேபோல CBSE பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு
குறைந்த கல்வி கட்டணத்தில்
நன்கு பயிற்சி பெற்ற ஆங்கில புலமையுள்ள ஆசிரியர்களை கொண்டு,
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி வழங்குவதுடன்,
மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட
அறிவியல் ஆய்வகம்,
கணித ஆய்வகம்,
கணினி ஆய்வகம்
ஆகியவை அமைத்து மாணவர்களுக்கு
சிறந்த கல்வியை வழங்கி வருகிறார்.
மேலும்
இந்த குறைந்த கல்விக்கட்டணத்திலேயே மாணவர்களுக்கான
சீருடை,
பாடபுத்தகங்கள்
உள்ளிட்ட கல்வி உபகரணங்களை
வழங்கி வருகிறார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமின்றி
விளையாட்டிலும் சிறந்து விளங்கும் வகையில்
பள்ளியைச் சுற்றிலும்
உலகத்தரம் வாய்ந்த
விளையாட்டு மைதானங்கள்
மற்றும்
உள்விளையாட்டு அரங்கங்களை
அமைத்து நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை நியமித்து
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க
ஏற்பாடு செய்துள்ளார்.
இப்படி மத்திகிரி பகுதியில்
சிறந்த CBSE கல்விக் கூடத்தை உருவாக்கி அருட்பணியுடன் கல்வி சேவையாற்றி,
இதர பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும்
கல்வித்தந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்களின்
குருத்துவ பணியின்
31-வது ஆண்டு நிறைவு விழா
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
26-04-2026-ம் தேதியன்று
ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த 31-ஆண்டு சிறப்பு திருப்பலியில்
ஒசூர் மறைவட்ட முதன்மை குரு
கல்விதந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள்
தருமபுரி மறைவட்ட முதன்மை குரு
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்கள் ஆகியோர் பங்கேற்று
சிறப்பு திருப்பலி பூஜை செய்து,
சிறப்பு மறையுரை நிகழ்த்தினார்கள்.
பாராட்டு விழா
அதைத் தொடர்ந்து
குருத்துவத்தில் 31 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்த
ஒசூர் மறைவட்ட முதன்மை குரு
கல்வி தந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்களுக்கு பாராட்டு விழா
நடைபெற்றது.
முதலில் மறைக்கல்வி மாணவிகள்
பங்கேற்ற நடனம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து
அருட்கன்னியர்கள்
பங்கு குழுவினர்
பாடல்குழுவினர்,
வின்சென்ட் தேபவுல் சபையினர்
அன்பியங்கள்
சார்பில்
கல்விதந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்து
நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வாழ்த்துரை
தருமபுரி மறைவட்ட முதன்மை குரு
மற்றும்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலய
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
அருட்பணி பெரியநாயகம் அவர்களின்
கடும் முயற்சியினால்
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளி மத்திகிரியின்
முகவரியாக உள்ளது.
இந்த காலத்தில் ஒரு பள்ளிக்கூடம் உருவாக்குவது வெகு சுலபமான காரியமில்லை.
அவருடன் இருந்த 5 ஆண்டுகளில்
நான் கண்டது என்னவென்றால்
அவரின் கடினமான உழைப்பு ஆகும்.
பள்ளிக்கான அங்கீகாரம் கிடைக்க கடினமாக உழைத்திருக்கிறார்.
கடவுள் இயேசு அவருடன் இருந்து
அவரை கரம்பிடித்து வழிநடத்துவதால் தான்
இன்று மத்திகிரியில் சிகரம் போன்று
உயர்ந்துள்ள செயின்ட் சேவியர் பள்ளியை
நிறுவி வெற்றி பெற்றிருக்கிறார்.
அவரது இந்த வெற்றிக்கு முதல் காரணம்
ஆண்டவர் இயேசு.
இரண்டாவது காரணம் அவரது கடினமான உழைப்பு ஆகும்.
ஆகவே இந்த சிறப்பான தருணத்தில்
அவரை வாழ்த்தி நாம் அனைவரும் இணைந்து அவருக்காக ஜெபிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் வாழ்த்துரை வழங்கினார்.
நன்றியுரை
கல்வி தந்தை
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள்
நன்றியுரையாற்றி பேசியதாவது,
கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்…
உங்களுக்கும் நன்றி சொல்கிறேன்….
இன்றைக்கு நான் இங்கு இருக்கிறேன்
என்று சொன்னால் …
சாமியாராக பணியாற்றியதால் தான்
இங்கு வந்து உங்களை சந்திக்க முடிந்தது.
இவ்வளவு பெரிய காரியத்தை
செய்யமுடிந்தது.
எனவே கடவுளுக்கு முதலில்
நன்றி கூறுகின்றேன்.
இரண்டாவது கடவுளின் திட்டம்
இந்தப்பங்கில் பணி செய்யவேண்டும்
என்பதாகும்.
இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன்.
இந்த பங்கில் 30 ஆண்டுகளுக்கு
முன்பு வாங்கப்பட்ட இடம்.
30 ஆண்டுகளாக யாரும் எதுவும்
செய்யவில்லை.
கடவுளின் திட்டம் இங்கு ஒரு பள்ளிக்கூடம் தொடங்கவேண்டும் என்பதாக இருந்தது.
கடவுளின் அருள் இல்லாமல்,
கடவுளின் வழிகாட்டுதல் இல்லாமல்,
கடவுளின் துணை இல்லாமல்
நிச்சயமாக என்னால் செய்திருக்க முடியாது.
ஏனென்றால் செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளிக்கு அங்கீகாரம்
கிடைப்பது கடினம் என்று கூறப்பட்டது.
அந்த சமயத்தில்
கடவுளின் வழிகாட்டுதலை
நான் உணர்ந்தேன்,
கடவுள் என்னோடு இப்பதை
நான் உணர்ந்தேன்.
எதிர்ப்புகள், சவால்கள் இயற்கையானது.
கடந்த 31 ஆண்டுகளாக
இருக்கக்கூடிய பிரச்சனைகள்,
போராட்டங்கள் மத்தியில்
கடவுள் என்னை கைவிடவில்லை.
அது தான் என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.
தொடர்ந்து வரும் காலங்களில்
கடவுள் என்னை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்… வழிநடத்துவார்.
காரணம் நான் அவர் ஒருவரை மட்டுமே நம்பி என்னுடைய பணிகளை செய்கிறேன்.
அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக என்னுடைய பணிகளை செய்யவில்லை.
இந்த காரியங்கள் நடைபெறுவதற்கு
கடவுளுக்கு அடுத்தபடியாக
உங்களுடைய ஜெபம்,
உங்களுடைய ஒத்துழைப்பு,
நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பங்கு மேன்மேலும் வளர வேண்டும்.
இந்த பங்குடன் சேர்ந்து பள்ளியும்
வளர வேண்டும்.
எனவே பள்ளியின் வளர்ச்சிக்காக
உங்களுடைய ஒத்துழைப்பை நான் எதிர்ப்பார்க்கிறேன்.
உங்களுடைய நல்ல உள்ளத்தை நான் எதிர்ப்பார்க்கிறேன்,
உங்களுடைய ஜெபத்தையும்,
ஆசீர்வாதத்தையும்
நான் எதிர்ப்பார்க்கிறேன்.
நமது ஆலயத்தில் சென்ற வாரம்
சவுண்ட் சிஸ்டம் போட்டுள்ளனர்.
சுமார் ரூ.1லட்சம் வரை பற்றாக்குறை இருப்பதாக ரூபன், ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் என்னை சந்தித்து கூறினார்கள்.
அந்த பணிக்காக
என்னுடைய 31-வது ஆண்டு
குருத்துவ பணி
நிறைவு பெறுவதை முன்னிட்டு
அந்த ரூ.1லட்சத்தை என்சார்பாகவும்,
என்னுடைய குடும்பத்தார் சார்பாகவும் வழங்குகிறேன்.
இந்த பங்கும், பள்ளியும்
இன்னும் வளர வேண்டும்.
பங்கு ஆனாலும் சரி…
பள்ளி ஆனாலும்சரி
எனக்கு ஒன்று தான்.
ஏனெனில் நீங்கள் அனைவரும்
என்னுடை மக்கள்.
அந்த உணர்வுடன் இங்கு பணிபுரிகிறேன்.
இவ்வாறு
கல்வி தந்தை
அருட்பணி பெரியநாயகம்
நன்றியுரையாற்றினார்.
சுவையான கேக்
31-வது ஆண்டு குருத்துவ பணி நிறைவு
பாராட்டு விழாவில்
அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில்
அருட்பணி அன்பு
அருட்சகோதரிகள் .
ஆலய பங்கு குழுவினர்
பாடல் குழுவினர்
மற்றும் பங்கு மக்கள் பங்கேற்றனர்.
------------------------------------.