கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர்,
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி
ஆகிய நான்கு
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்
2026-2027-ஆம் ஆண்டிற்கான
மாணவர்கள் சேர்க்கைக்கு
விருப்பமுள்ளவர்கள் 03.06.2026 வரை
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 21. –
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்
2026-2027-ம் ஆண்டிற்கான
மாணவர்கள் சேர்க்கை
03-06-2026 வரை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய நான்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விருப்பமுள்ளவர்கள் 03.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய நான்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நான்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 03.06.2026 வரை www.skilltraining.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்குமேல் கல்வி தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை ஆகும். மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்கள் எலக்ட்ரிசியன் எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ருமென்ட் மெக்கானிக், மெசினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டூல் அண்டு டை மேக்கர்ஸ், டர்னர் மற்றும் டெக்னிசியன் மெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டு வேர் அண்டு நெட்வோர்க் மெயின்டனஸ், கோபா (பார்வை குறைபாடு உள்ளவர்கள் மட்டும் ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெசின் டூல்ஸ், ரெப்ரிஜிரேட்டர் & ஹெர்கண்டிசினிங், டெக்னிசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், இன்பிளான்ட் லாஜிஸ்டிக் உதவியாளர், சிவில் இன்ஜினியர் உதவியாளர் மற்றும் ஏரோநாட்டிகல் ஸ்டரக்சர் & எகிப்மெண்ட் பிட்டர் ஆகிய 17 தொழிற்பிரிவுகளும் தொழில் 4.0 தரத்தில் சி.என்சி எந்திரம் இயக்குபவர், பேசிக் டிசைனர் அண்டு விர்சுவல் வெரிபையர், இண்டஸ்டிரியல் ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்டு அட்டோமேசன் மற்றும் மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம் ஆகிய 5 தொழிற்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒயர்மேன் தொழிற்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி ஐடிஐ-யில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில்
பதிவு செய்தவர்களும் அவர்களின்
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே
விண்ணப்பிக்க முடியும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை.
பயிற்சி காலத்தில்
மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை,
அரசு பள்ளிகளில் படித்த மாணவ/மாணவிகளுக்கு புதுமைபெண் / தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000/-, விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, மீதிவண்டி, பேருந்து பயண அட்டை மற்றும் மூடுகாலணி வழங்கப்படுகிறது.
ஆகவே, ஐடிஐ சேர விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் சான்றி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்று, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் வங்கி கண புத்தகம் ஆகிய அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய தொழிற்ச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ் பெற்றவர்களுக்கு தனியார் தொழிற் நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் 100 சதவீகிதம் வேலை பெற்று வழங்கப்படுகிறது. மேலும் அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஆகவே 8-வது மற்றும் 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கும் மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்கள் உடனடியாக ஐடிஐ சேர்க்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இணையதளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், கிருஷ்ணகிரி ஆகிய சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் சென்று இலவசமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், கூடுதல் தகவலுக்கு
04344-262457, 9499055838, 9597812767, 9442525608, 9786050759, 9597812767 மற்றும் 9787970227 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------.