கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி வட்டம்
சானமாவு பஞ்சாயத்து
டி.கொத்தப்பள்ளி கிராமத்தில்
400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற
திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா சுவாமி
திருக்கோயிலில்
387-வது ஆண்டு தேர்த்திருவிழா
முறம் மற்றும் துடைப்பத்தால்
அடிவாங்கி வினோத வழிபாடு
நடத்திய பக்தர்கள்
ஒசூர். ஏப். 08. –
டி.கொத்தப்பள்ளி கிராமத்தில்
திரௌபதி அம்மன் உடனுறை
ஸ்ரீதர்மராஜ சுவாமி கோவில்
தேர்த்திருவிழா,
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி வட்டம் சானமாவு பஞ்சாயத்து
ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில்
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பிரசித்தி பெற்ற
திரௌபதி அம்மன் உடனுறை
ஸ்ரீதர்மராஜ சுவாமி கோவில்
தேர்த்திருவிழா,
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
பங்கேற்புடன் ஏப்ரல் 8-ம் தேதியன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
டிகொத்தப்பள்ளி மற்றும்
அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள
27 கிராம மக்கள் ஒன்றிணைந்து
கொண்டாடிய இந்த விழாவில்,
பூசாரி கையால் முறம் மற்றும்
துடைப்பத்தால் அடிவாங்கி
பக்தர்கள்
தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய
வினோத நிகழ்வு அனைவரது
கவனத்தையும் ஈர்த்தது.
ஓசூர் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி
கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு திரௌபதி அம்மன்
உடனுறை
ஸ்ரீதர்மராஜ சுவாமி திருக்கோவில்
மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு ஆண்டுதோறும்
தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
2026-ம் ஆண்டு தேர்த்திருவிழா
ஏப்ரல் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் நாள்தோறும்
திரௌபதி அம்மனுக்கும்
தர்மராஜ சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும்
சிறப்பு அலங்காரம் செய்து
பூஜைகள் நடைபெற்று வந்தன.
27 கிராமமக்கள்
நடத்தும் திருவிழா
இந்த தேர்த்திருவிழாவை
ஒசாபுரம், கூட்டூர்
உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த
27 கிராம மக்கள் ஒருங்கிணைந்து
நடத்தி வருகின்றனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக
387-வது ஆண்டு திருத்தேரோட்டம்
ஏப்ரல் 8-ம் தேதியன்று காலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில்,
உற்சவர் ஸ்ரீதர்மராஜ சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் மீது கையில் வைத்துள்ள
துடைப்பம் மற்றும் முறத்தால் அடித்து
ஆசி வழங்கும் பூசாரி
இக்கோவிலின் பூசாரி
கடந்த பத்து நாட்களாக உணவின்றி
கடுமையான விரதம் இருந்து
சுவாமிக்கு பூஜைகள் செய்து வந்தார்.
விழாவின் நிறைவில்
பூசாரி மீது
தர்மராஜ சுவாமி இறங்கி வந்து
அருள் பாலிப்பதாக ஐதீகம்.
அப்போது ஆவேசத்துடன் வரும் பூசாரி,
வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மீது
கையில் வைத்துள்ள
துடைப்பம் மற்றும் முறத்தால் அடித்து
ஆசி வழங்கினார்.
இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை
ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம்
அடி வாங்கி ஆசி பெற்றனர்.
தங்களது
இந்த வினோத வழிபாட்டிற்கு பின்னால்
ஒரு ஆழமான நம்பிக்கை உள்ளதாக
இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அடி வாங்குவதன் மூலம்,
திருமணத் தடை நீங்கும்,
குழந்தை பாக்கியம் கிடைக்கும்,
தீராத கடன் பிரச்சனைகள் தீரும்,
பில்லி சூனியம்,
பேய் பிசாசு மற்றும் தீய சக்திகள்
விலகி குடும்பத்தில் அமைதி நிலவும்
என பக்தர்கள் நம்பிக்கையுடன்
வழிபாடுகள் நடத்துகின்றனர்.
இந்த வினோத வழிபாட்டைக் காணவும், பங்கேற்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,
அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் குவிந்தனர்.
விழா ஏற்பாடுகளை
கோயில் தர்மகர்த்தா
திரு. இராமநாதன் கூட்டூர்,
சிறப்பாக செய்திருந்தார்.
விழாவையொட்டி அப்பகுதியில்
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
------------------------------------.