குழந்தை திருமணம்
சட்டப்படி நடவடிக்கை
கலெக்டர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
குழந்தைகளுக்கு இளம்வயது
திருமண ஏற்பாடு செய்தல்
அல்லது
நடத்தி வைத்தல்
போன்ற குற்ற செயல்களில்
ஈடுபடும் நபர்கள் மீது
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப.
அவர்கள் எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி. ஏப். 01. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
குழந்தைகளுக்கு இளம்வயது
திருமண ஏற்பாடு செய்தல்
அல்லது நடத்தி வைத்தல் போன்ற
குற்ற செயல்களில்
ஈடுபடும் நபர்கள் மீது
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப.
அவர்கள் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
குழந்தை திருமணம்
தடுத்து நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம்
கங்கோஜி கொத்தூர் அஞ்சல்,
ஜெகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த
17 வயது சிறுமிக்கு
குழந்தை திருமணம் நடைபெறுவதாக
குழந்தைகள் உதவி மைய 1098 க்கு
தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
மாவட்ட ஆட்சியர்
அவர்களின் உத்திரவின் பேரில்,
குருபரப்பள்ளி காவல் நிலைய
உதவி காவல் ஆய்வாளர்,
கங்கோஜி கொத்தூர்
கிராம நிர்வாக அலுவலர்,
கிராம உதவியாளர் மற்றும்
குழந்தைகள் உதவி மைய
வழக்கு பணியாளர்
ஆகியோர் கொண்ட குழுவானது
துரிதமாக செயல்பட்டு
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமத்திற்கு
கடந்த 29.04.2026 அன்று நேரில் சென்று
கள விசாரணை மேற்கொண்டதில்
சிறுமிக்கு நடைபெற இருந்த
இளம்வயது திருமணமானது
தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் மேற்படி சிறுமி,
அவர்தம் பெற்றோர் மற்றும்
ஊர்பொதுமக்கள் ஆகியோருக்கு
இளம்வயது திருமணத்தால்
ஏற்படும் தீமைகள் மற்றும்
அதன் பாதிப்புகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தை திருமண தடைச் சட்டம் 2006
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
குழந்தைகளுக்கு இளம்வயது
திருமண ஏற்பாடு செய்தல் அல்லது
நடத்தி வைத்தல் போன்ற
குற்ற செயல்களில் ஈடுபடும்
நபர்கள் மீது
குழந்தை திருமண தடைச் சட்டம் 2006
பிரிவு 9,10 மற்றும் 11 -ன் கீழ்
2 ஆண்டுகள் வரை அல்லது
ரூ.100,000/- அபராதம் அல்லது
இரண்டும் சேர்ந்த தண்டனை
வழங்கப்படும்.
குறிப்பாக மேற்படி இளம் வயது
திருமணத்தில் துணை நிற்கும்
பெற்றோர்கள் மீது
கடுமையான நடவடிக்கை
மேற்கொண்டு தண்டனை
வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------------.