வாக்குப்பதிவு நாளன்று
தொழிலாளர்களுக்கு
ஊதியத்துடன் விடுமுறை
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வாக்குப்பதிவு நாளன்று
தொழிலாளர்களுக்கு ஒரு நாள்
ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆப,
அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி. ஏப். 20. -
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வாக்குப்பதிவு நாளன்று
தொழிலாளர்களுக்கு
ஒரு நாள்
ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1951-ஆம் ஆண்டு
மக்கள் பிரதிநிதித்துவம்
சட்டம் பிரிவு 135B -ன் படி
தொழிலாளர்கள் அனைவருக்கும்
ஊதியத்துடன் கூடிய
பொது விடுமுறை நாளாகும்.
எனவே தேர்தல் நாளான்று
தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி,
100 சதவீத வாக்குப்பதிவை
உறுதி செய்ய ஏதுவாக,
தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும்
அனைத்து தனியார் தொழிற்சாலைகள்
மற்றும்
தொழில் நிறுவனங்கள்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும்
வர்த்தக நிறுவனங்கள்,
பொது மற்றும் தனியார்
மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்,
தனியார் உணவு நிறுவனங்கள்,
சினிமா தியேட்டர் மற்றும்
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில்
பணிபுரியும் தினக் கூலி பணியாளர்கள்,
தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்
உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும்
தேர்தலில் வாக்கு செலுத்த ஏதுவாக
சம்பளத்துடன் கூடிய ஒருநாள்
விடுமுறையை அளிக்கபட வேண்டும்.
மேலும்,
தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு
பொது விடுமுறை அளிக்காத
நிறுவனங்களைப் பற்றிய புகார்களுக்கு
தொழிலாளர் நலத்துறை மூலம்
மாவட்ட கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விடுமுறை அளிக்காத
நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்க
கீழ்க்காணும் தொலைபேசி எண்ணிற்கு
(கட்டுப்பாட்டு அறை-
04343 - 230520)
தொடர்பு கொள்ளலாம்.
மேலும்,
தொழிற்சாலைகள்
தொடர்பான புகார் குறித்து
திருமதி.இளவரசி,
துணை இயக்குநர் (9003887193),
திருமதி.ஹரிணி
உதவி இயக்குநர் (9655810973)
என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
மேலும்,
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்.
உணவு நிறுவனங்கள்
பணிபுரியும் தொழிலாளர்களுக்கு
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
புகார் அளிக்க
ம.ராஜசேகரன்,
உதவி ஆணையர் (9715637868),
ந.மாயவன்,
துணை ஆய்வாளர் (9715366345)
தா.செந்தில்குமார்.
முத்திரை ஆய்வாளர் (9442413438)
ஆகியோரை தொடர்பு கொண்டு
புகார் அளிக்கலாம்.
எனவே,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து தொழிற்சாலைகள் மற்றும்
தொழில் நிறுவனங்களை
சார்ந்த உரிமையாளர்கள்
கட்டாயம் வாக்குப்பதிவு நாளான்று
ஊதியத்துடன் கூடிய
விடுமுறை அளிக்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத
நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ
சட்டப்படி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
------------------------------------------.