திமுக வேட்பாளர்
மேயர் S.A.சத்யா அவர்களுக்கு
கிராமங்களில்
மேளதாளங்களுடன்
பட்டாசு வெடித்து
ஆரத்தி எடுத்து
சிறப்பான வரவேற்பு
அளித்த கிராம மக்கள்
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
தேர்தல் பிரச்சார
சுற்றுப்பயணம் தொடக்கம்
முதல் நாளில் 32 கிராமங்களில்
திமுக அரசின் சாதனைகளை கூறி
தீவிர வாக்கு சேகரிப்பு
ஒசூர். ஏப். 10. –
ஒசூர் தொகுதி கிராமங்களில்
திமுக வேட்பாளர் S.A. சத்யா
திமுக அரசின் சாதனைகளை கூறி
தீவிர வாக்கு சேகரிப்பு
ஒசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்
மேயர் S.A.சத்யா
அவர்கள்
வெள்ளிக்கிழமை (10/04/2026) அன்று
தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில்
B.S.திம்மசந்திரம் கிராமத்தில்
தொடங்கி முகலப்பள்ளி கிராமம் வரை
32 கிராமங்களில் தேர்தல் பிரச்சார
சுற்றுப்பயணம் மேற்கொண்டு
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிராமங்களில் பட்டாசு வெடித்து
சிறப்பான வரவேற்பு
அப்போது ஒவ்வொரு கிராமங்களிலும்
கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும்
மேளதாளங்களுடன் மாலை அணிவித்தும்
தாய்மார்கள் ஆரத்தி எடுத்தும்
சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
திமுக அரசின் சாதனைகள்
அப்போது கிராம மக்களிடையே
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தலைமையிலான திமுக அரசு
கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள
வளர்ச்சித்திட்டங்கள் மற்றும்
சாதனைகளை எடுத்துக் கூறி
வாக்கு சேகரித்தனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
மதசார்பற்ற முற்போக்கு
கூட்டணி வேட்பாளர்
மேயர் S.A.சத்யா
கூறியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
ஐந்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நகரப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமங்களிலும்
செய்யப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
உள்ளிட்ட சிறப்பு திட்டங்களால்
பயன்பெற்றுள்ள பெண்கள்,
நாங்கள் வாக்கு கேட்டுச்செல்லும் போது பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கின்றனர்.
இது எங்களை வெற்றி அடையச் செய்யும்.
இதற்கு முக்கியமான காரணம்
முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தேர்தல் சுற்றுப்பயணத்தில்
திமுக கட்சியின்
மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும்
ஒசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ்
அவர்கள்
காங்கிரஸ் கிருஷ்ணகிரி
மக்களவை உறுப்பினர்
கே. கோபிநாத்,
அவர்கள்
ஒசூர் தொகுதி மேற்பார்வையாளர்
பார். இளங்கோவன்
ஆகியோர் பங்கேற்று
கிராம மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது
திமுக வேட்பாளர்
மேயர்.S.A.சத்யா
அவர்களை
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றபெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்கு
திமுக ஆட்சியில்
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
ஒசூர் மாநகராட்சியில்
ரூ.580 கோடி மதிப்பில்
புதிய பாதாள சாக்கடை திட்டம்.
ரூ.100 கோடி மதிப்பில்
புதிய அரசு மருத்துவமனை.
பத்தலப்பள்ளியில்
ஒசூர் புறநகர் பஸ் ஸ்டாண்ட்.
ரூ.20 கோடி மதிப்பீட்டில்
பிரம்மாண்ட வணிக வளாகம்.
ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க
ரூ.4 கோடி மதிப்பில் 2 வழி சாலைகள்
4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி மதிப்பில்
காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்.
பல கோடி ரூபாய் மதிப்பில்
கிராமங்களில் புதிய தார் சாலைகள்,
சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளது.
என பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகளிர் விடியல் பயணம் திட்டம்.
2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும்
முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து
மகளிர் விடியல் பயணம் திட்டம்.
காலை உணவு திட்டம்
அரசுப் பள்ளியில் குழந்தைகள் பசியோடு படிக்கக் கூடாது என்பதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நான் முதல்வன் திட்டம்
புதுமைப்பெண் திட்டம்
அரசு பள்ளியில் படித்து எந்த அரசு தனியார் கல்லூரியில் சேர்ந்தாலும் அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள்,
விலையில்லா லேப்டாப்
10 லட்சம் மாணவர்களுக்கு
விலையில்லா லேப்டாப்
வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
ஒரு கோடியே 31 லட்சம் மகளிர்க்கு
மகளிர் உரிமைத்தொகை
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்.
மக்களை தேடி மருத்துவம்
இப்படி பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் தொடர வேண்டுமென்றால் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய
நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்
எனக்கூறி வாக்கு சேகரித்தனர்.
2026 தேர்தல் அறிக்கை
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன்
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை
2000 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்படும்.
ஐந்தாம் வகுப்பு வரை
உள்ள காலை உணவு திட்டம்
எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்
கல்வி ஊக்கத்தொகை திட்டம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்
அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும்
35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு
எந்தவித பினையும் இல்லாமல்
ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்,
இல்லத்தரசி திட்டம்
இல்லத்தரசி என்ற திட்டம் மூலம்
எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்,
அதை வைத்துக்கொண்டு
வீட்டிற்கு தேவையான குக்கர், மிக்ஸி,
டிவி, மைக்ரோ ஓவன்,
உள்ளிட்ட மின்சாதன பொருட்களை
வாங்கிக் கொள்ளலாம் என்பது உட்பட திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் மீண்டும்
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய
திமுக வேட்பாளர் மேயர் S.A.சத்யா
அவர்களுக்கு
உதயசூரியன் சின்னத்தில்
வாக்களித்து பெருவாரியான
வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற செய்ய வேண்டும் என
திமுக வேட்பாளர் S.A.சத்யா உட்பட
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
கட்சிகளின் நிர்வாகிகள்
கிராம மக்களிடையே
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதி
கிராமப்பகுதிகளில்
தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்
மேற்கொண்ட
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்களுக்கு
கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து
மேளதாளங்களுடன்
மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து
ஆரத்தி எடுத்து
சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
----------------------------------.