கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
2025-2026-ம் கல்வியாண்டில்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த
மாணவர்கள் அனைவரும்
100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதை
பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள்
உறுதி செய்ய வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அறிவுரை.
கிருஷ்ணகிரி. ஜுன். 11. –
உயர்கல்வி வழிகாட்டி
ஆசிரியர்களுக்கான
மீளாய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
பள்ளிக்கல்வித்துறை சார்பாக,
அரசு பள்ளிகளில்,
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த
மாணவர்களின்
உயர்கல்விச் சேர்க்கை குறித்து
உயர்கல்வி வழிகாட்டி
ஆசிரியர்களுக்கான
மீளாய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (11.06.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு
முடித்த மாணவர்கள் அனைவரும்
உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் நோக்கில்,
உயர்கல்வி வழிகாட்டி
ஆசிரியர்களுக்கான
மீளாய்வுக் கூட்டம்
இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
மாவட்டத்தில் அரசு பள்ளிகளில்
பயின்ற 14,392 மாணவர்கள் எவரும்
விடுபடாமல் உயர்கல்வியில் சேர்வதை
உறுதி செய்ய வேண்டுமென
வலியுறுத்தப்பட்டது.
இதற்காக
பள்ளி அளவில்
சிறப்பு முகாம்கள் நடத்தி,
மாணவர்களுக்கு உயர்கல்விக்கான
விண்ணப்ப செயல்முறை,
கல்லூரி மற்றும் பாடப்பிரிவு
தேர்வு செய்யும் வழிமுறைகள்,
கல்விக் கடன்
பெறுவதற்கான ஏற்பாடுகள்,
பல்வேறு உயர்கல்வி ஊக்கத்தொகைகள்
குறித்த தகவல்கள் மற்றும்
பெற்றோர்கள் இல்லாத மாணவர்களுக்கு
அரசால் வழங்கப்படும்
சலுகைகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும்,
இதுவரை உயர்கல்விக்காக
விண்ணப்பிக்காத
மாணவர்களை கண்டறிந்து
கள ஆய்வு மேற்கொண்டு,
அவர்களை உயர்கல்வியில் சேர்க்க
தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
சட்டத்துறை மற்றும்
வேளாண்துறை சார்ந்த
உயர்கல்விப் படிப்புகளில்
மாணவர் சேர்க்கை
குறைவாக உள்ளதால்,
இத்துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்
வழிகாட்டி ஆசிரியர்கள்
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்
உரிய விழிப்புணர்வு மற்றும்
ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மேலும்,
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு
நிதி உதவி வழங்கும் வகையில்
நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு
(CSR) திட்டங்களின் கீழ்
பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக,
TVS
மற்றும்
Titan
நிறுவனங்களின்
ஒத்துழைப்புடன் உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே,
தகுதியும் விருப்பமும் உள்ள
மாணவர்கள் அனைவரும்
இவ்வாய்ப்பை முழுமையாக
பயன்படுத்திக் கொள்ளும் வகையில்
தேவையான தகவல்களை
உயர் வழிகாட்டி ஆசிரியர்கள்
வழங்க வேண்டும்.
கடந்த கல்வியாண்டில்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த
மாணவர்கள் அனைவரும்
100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதை
உறுதி செய்யும் வகையில்
ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் உயர்கல்வி பயிலுதல்
குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு
9750982553, 8682925404,
04343-234444 மற்றும் 1077
ஆகிய எண்களில்
அனைத்து வேலை நாட்களிலும்
தொடர்பு கொண்டு விவரங்களை
அறிந்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
திரு.இரா.மதன்குமார்,
மாவட்டக் கல்வி அலுவலர்
திரு.கிருஷ்ணன் (ஓசூர்),
மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.மோ.மகேந்திரன்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்
மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்,
மாவட்டத்தின் அனைத்து மேல்நிலைப்பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
------------------------------------------.