குறும்படப் போட்டி
முதல் பரிசு - ரூ.2 லட்சம்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்
(Short Film Competition) குறும்படப் போட்டியில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
அனைத்து குடிமக்களும் வயது வரம்பின்றி
கலந்துகொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 12. –
இந்திய தேசிய மனித உரிமைகள்
ஆணையம் (NHRC),
குறும்படப்போட்டி
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்
(Short Film Competition)
குறும்படப் போட்டியில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
அனைத்து குடிமக்களும் வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
.
இந்திய தேசிய மனித உரிமைகள்
ஆணையம் (NHRC),
மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்
12-வது ஆண்டாக குறும்படப் போட்டியை
அறிவித்துள்ளது.
இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் வயது வரம்பின்றி கலந்து கொள்ளலாம்.
போட்டியின் முக்கிய விவரங்கள்.
பரிசுத் தொகை:
முதல் பரிசு - ₹2 லட்சம்,
இரண்டாம் பரிசு - ₹1.50 லட்சம்,
மூன்றாம் பரிசு . 1 லட்சம்.
மேலும், சிறப்புத் தகுதி பெறும்
4 படங்களுக்கு தலா ₹50,000 வழங்கப்படும்.
மொழிகள்:
ஒரு இந்தி அல்லது ஏதேனும் இந்திய மொழி (ஆங்கில துணைத்தலைப்புடன் Subtitles) அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.
கால அளவு:
குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல்
அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை.
வயது வரம்பு:
வயது வரம்பு ஏதுமில்லை; அனைத்து இந்திய குடிமக்களும் பங்கேற்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய விதம்:
கூகுள் டிரைவ் (Google Drive) வழியாக nhrcshortfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி 30 ஜூன் 2026
கூடுதல் விவரங்கள் மற்றும்
விண்ணப்பப் படிவங்களை
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ
இணையதளமான
https//nhrenic.in
என்பதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
கல்வி நிறுவனங்கள்,
கிராம ஊராட்சிகள் மற்றும்
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
இதில் பெருமளவில் கலந்து கொண்டு
மனித உரிமை கலாச்சாரத்தை
வளர்க்க ஒத்துழைக்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------.