தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல், 2026-ல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
15,69,141 வாக்காளர்கள்
வாக்களிக்க உள்ளனர் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப,
அவர்கள்
செய்தியாளர் சந்திப்பில் தகவல்.
கிருஷ்ணகிரி.ஏப். 21. –
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் - 2026
நடைபெறவுள்ளதையொட்டி.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
ஆறு சட்டமன்ற தொகுதிகளில்
தேர்தல் நடைபெற
மேற்கொள்ளப்பட்டுள்ள
முன்னேற்பாடு பணிகள் குறித்து
செய்தியாளர்களுடனான சந்திப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப
அவர்கள் தலைமையில் இன்று
(21-04-2024) நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப,
அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026,
15.03.2026 அன்று அறிவிக்கப்பட்டு
வாக்குப்பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை)
அன்று காலை 07.00 மணி முதல்
மாலை 06.00 மணி வரை நடைபெறும்.
தொடர்ந்து,
04.05.2026 (திங்கள்கிழமை)
அன்று வாக்கு எண்ணிக்கை
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப
கல்லூரியில் வைத்து நடைபெறும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
7,83,351 ஆண் வாக்காளர்கள்,
7,85,524 பெண் வாக்காளர்கள் மற்றும்
266 மூன்றாம் பாலின வாக்காளர்கள்
என மொத்தம்
15,69,141 வாக்காளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதியில்
தேசிய / மாநில அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சி வேட்பாளர்கள்,
பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள்
மற்றும் சுயேட்ச்சைகள் உள்பட
79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
தேர்தல் செலவு கண்காணிப்பு குழுக்களான
57 பறக்கும் படை குழுக்கள்,
57 நிலையான கண்காணிப்பு குழுக்களும்,
12 வீடியோ கண்காணிப்பு குழுக்களும்,
06 வீடியோ பார்வையிடல் குழுக்களும்,
06 தேர்தல் கணக்கீட்டு குழுக்களும் மற்றும்
06 உதவி செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளான
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தையொட்டி
16 இடங்களில்
சோதனைச்சாவடிகள்
அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக
சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இத்தேர்தலுக்கு
2508 வாக்குச்சீட்டு
பதிவு இயந்திரங்கள் (BU).
2508 வாக்குப்பதிவு
கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (CU).
மற்றும்
2717 வாக்காளர் பதிவு
சரிபார்க்கும் இயந்திரங்கள் (VVPAT).
என மொத்தம்
7,733 வாக்குப்பதிவு
இயந்திரங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
51.ஊத்தங்கரை (தனி)
சட்டமன்ற தொகுதியில்
319 வாக்குச்சாவடிகளில்
28 பதற்றமான வாக்குச்சாவடிகள்
என அறிவிக்கப்பட்டு
நுண் பார்வையாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
52. பர்கூர்
சட்டமன்ற தொகுதியில்
324 வாக்குச்சாவடிகளில்
32 பதற்றமான வாக்குச்சாவடிகள்
என அறிவிக்கப்பட்டு
நுண் பார்வையாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
53.கிருஷ்ணகிரி
சட்டமன்ற தொகுதியில்
340 வாக்குச்சாவடிகளில்
47 பதற்றமான வாக்குச்சாவடிகள்
என அறிவிக்கப்பட்டு
15 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
54.வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதியில்
343 வாக்குச்சாவடிகளில்
20 பதற்றமான வாக்குச்சாவடிகள்
என அறிவிக்கப்பட்டு
10 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
55.ஒசூர்
சட்டமன்ற தொகுதியில்
446 வாக்குச்சாவடிகளில்
77 பதற்றமான வாக்குச்சாவடிகள்
என அறிவிக்கப்பட்டு
15 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
56.தளி
சட்டமன்ற தொகுதியில்
321 வாக்குச்சாவடிகளில்
31 பதற்றமான வாக்குச்சாவடிகள்
என அறிவிக்கப்பட்டு
15 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
73 பதற்றமான வாக்குச்சாவடி
மையங்களில் உள்ள
235 வாக்குச்சாவடி நிலையங்களுக்கு
73 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
2093 வாக்குச்சாவடிகளிலும்
கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
இணையதள வசதி குறைவாக உள்ள
72 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கும் நுண்பார்வையாளர்கள்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
06 மாதிரி வாக்குச்சாவடிகள் மற்றும்
06 பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்
06 இளைஞர்கள் நிர்வாகிக்கும்
வாக்குச்சாவடிகள் மற்றும்
06 மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்
அமைக்கப்பட உள்ளன.
C.VIGIL செயலி மூலம்
90 புகார்கள் பெறப்பட்டு
90 புகார்களுக்கும்
தீர்வு காணப்பட்டுள்ளது.
85 வயதிற்கு மேற்பட்ட
10.818 மூத்த குடிமக்கள் வாக்காளர்களில்
2441 மூத்த குடிமக்கள் விருப்பம் தெரிவித்து
2314 தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மேலும்
14,919 மாற்றுத்திறனாளி வாக்காளர்களில்
1190 மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்து 1156 மாற்றுத்திறனாளிகள்
தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, மொத்தம் 25,737 வாக்காளர்களில்
25737 வாக்காளர்களுக்கு
12டி படிவம் வழங்கப்பட்டு
3,691 வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்து
3,470 வாக்காளர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க
1153 மூன்று சக்கர நாற்காலிகள், மாற்றுத்திறனாளிகளுக்கென
சிறப்பு வரிசை மற்றும் சாய்தளம்
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு
03 பொதுபார்வையாளர்கள்.
03 செலவின பார்வையாளர்கள் மற்றும்
01 காவல்துறை பார்வையாளர்
நியமிக்கப்பட்டு.
06 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
12 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
20 பொறுப்பு அலுவலர்கள்,
203 மண்டல குழுக்கள்,
114 பறக்கும்படை மற்றும்
நிலையான குழுக்கள்
10.048 வாக்குப்பதிவு பணியாளர்கள்
160 தேர்தல் நுண்பார்வையாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,
தமிழ்நாடு காவல்துறையினர்.
இராஜஸ்தான் காவலர்கள்.
துணை இராணுவப்படையினர்
உட்பட 2246 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சட்டவிரோதமாக, சரியான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பணம் மதுபானங்கள் மற்றும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்யும் விதமாக
பறக்கும்படை குழுக்கள் (FST) மற்றும்
நிலையான குழுக்கள் மூலம் (SST)
ரூ.518,60,883 பறிமுதல் செய்யப்பட்டு,
அதில் ரூ.4,66,08,383/ தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதன் அடிப்படையில் உரிய நபர்களிடம் திரும்ப வழங்கப்பட்டு
ரூ.52,62,500/-ரொக்கம்
மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2538 லட்சம் மதிப்பிலான
விலை மதிப்பு மிக்க பொருட்கள்
(தங்கம் உள்ளிட்டவை)
ரூ.25.920/. மதிப்புள்ள பிற பொருட்கள்
பறக்கும் படை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரூ.10.25 லட்சம் மதிப்புள்ள
2450 லிட்டர் மதுபானங்களும்.
ரூ.103.85 லட்சம் மதிப்புள்ள
207.61 கிலோ கிராம்கள் போதைப்பொருட்கள் காவல்துறையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
24 மணிநேரமும் இயங்கும்
தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம்
(Control Room) 76 புகார்கள் பெறப்பட்டு
அனைத்து புகார்களுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் 23-04-2026
நடைபெறுவதை முன்னிட்டு
அனைத்து தொழிலாளர்களுக்கும்
ஊதியத்துடன் கூடிய விடுப்பு
வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று (23.04.2026)
வாக்காளர்கள்
1.வாக்காளர் அடையாள அட்டை
2.ஆதார் அட்டை,
3.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை,
4.வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சல் அலுவலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டது.
5.மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது).
6.ஓட்டுநர் உரிமம்.
7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
8. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது).
9. இந்திய கடவுச்சீட்டு.
10. ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது.
11. மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.
12. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற சட்டமன்றப் பேரவை / சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது),
13. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது).
இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்களிக்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு.
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் இருசக்கர வாகன பேரணி விழிப்புணர்வு,
3000 பொதுமக்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு நடை பயணம்,
பாராகிளைடிங்,
2500 மாணவர்கள் கலந்து கொண்ட
100 சதவீத விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசக வடிவம்
அமைத்து ஈடுபட்டனர்.
ரங்கோலி போட்டிகள் மற்றும்
கையெழுத்து இயக்கம் மூலமும்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில்
மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு
மூன்று சக்கர வாகன
விழிப்புணர்வு பேரணி
அலங்கார வாகன அணிவகுப்பு தடைபெற்றது.
மேலும் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ராட்சஸ பலூன் பறக்க விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில்
100% வாக்களிப்பதை
உறுதி செய்யும் நோக்கில்
மலர்கள் மற்றும் தானிய விதைகள் வைத்து
தேர்தல் தேதி அலங்கரிக்கப்பட்டது.
-Ink finger statue மலர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், சமூக வலைதளங்களில்
ரீல்ஸ் மூலம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
ஆவின் பால் பாக்கெட்,
சிலிண்டர்.
இரு சக்கர வாகனங்கள்.
ஆட்டோக்கள்,
பேருந்துகளில்
தேர்தல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு
வாகனம் மூலம் பொதுமக்களுக்கு
வாக்காளர் விழிப்புணர்வு
வீடியோ படக்காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், "Flash mob" நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல்
23.04.2026 (வியாழக்கிழமை) அன்று
தங்களுக்குரிய வாக்குச்சாவடி நிலையம் மையங்களுக்குச் சென்று
தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மேலும்.
நடைபெற உள்ள
சட்டமன்ற பொதுத்தேர்தலை
அமைதியாகவும் சுதந்திரமாகவும்
நடத்திட பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கிருஷ்ணன்.
ஊடக மைய பொறுப்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
தனி வட்டாட்சியர் (தேர்தல்)
திரு. சம்பத்து
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா-
----------------------------------------.