தமிழ் மொழி
பண்பாடு,
காலச்சாரத்தை
பாதுகாக்கின்ற
அரணாக இருப்பவர்
நமது முதலமைச்சர்
நமது கலாச்சாரமான
உடுத்தும் உடை, பேசும் மொழி,
உண்ணும் உணவு பழக்கம்,
கல்வி முறை மற்றும்
நமது பண்பாடு
ஆகியவை எல்லாம் மாறாமல்
பாதுகாத்திட வேண்டும் என்றால்
நமக்கெல்லாம் அரணாக இருக்கின்ற
முதலமைச்சர் அவர்களை
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச் செய்யவேண்டும்........
மேயர் S.A. சத்யா
மத்திகிரியில் பரப்புரை
ஒசூர். ஏப். 18. –
பட்டாசு வெடித்து மலர் தூவி
உற்சாக வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மத்திகிரி பகுதியில் வாக்கு சேகரிக்க
இருசக்கர வாகனத்தில்
வருகை தந்த
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்களுக்கு
பட்டாசு வெடித்து
மேளதாளங்கள் முழங்க
ஆளுயர மாலை,
பொன்னாடை அணிவித்து
மலர் தூவி
உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
மத்திகிரி மற்றும் அதைச்சுற்றியுள்ள குடியிருப்புகளில்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில்
மதசார்பற்ற முற்போக்கு
கூட்டணியின் சார்பாக
மாண்புமிகு முதலமைச்சர் சார்பாக.
ஒசூர் தொகுதி மக்களின் சார்பாக
போட்டியிடுகின்ற எனக்கு
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும்
என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
என்று கூறி மத்திகிரியில்
கூடியிருந்த வாக்காளர்களிடையே
வாக்கு சேகரித்தார்.
எண்ணற்ற திட்டங்கள்
தந்த அரசு... திமுக அரசு...
மேலும் அவர் பேசும் போது கூறியதாவது,
ஓசூர் தொகுதியில்
ரூ.100 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனை திட்டம்
ரூ.50 கோடி மதிப்பில்
புதிய பேருந்து நிலையம் திட்டம்
ரூ.580 கோடி மதிப்பில்
பாதாள சாக்கடை திட்டம்
இப்படி எண்ணற்ற திட்டங்களை
தந்த அரசு தான் திமுக அரசு.
இந்த அரசு தொடர வேண்டும் என்றால்
நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில்
வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ் பண்பாடு, கலாச்சாரம்
பாதுகாத்திட ...
திமுகவுக்கு வாக்களியுங்கள்
பாஜக உடன் அதிமுக கூட்டணி
வைத்துள்ளது.
அந்த கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால்
நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்
என்ன ஆடை உடுத்தவேண்டும்
என்பதை
முடிவு செய்வது
பாஜகவாக தான் இருக்கும்.
ஆக பாஜக மற்றும் அதிமுகவை
நாம் புறக்கணிக்க வேண்டும்.
ஏன் என்றால்…
நமது கலாச்சாரமான
உடுத்தும் உடை,
பேசும் மொழி,
உண்ணும் உணவு பழக்கம்,
கல்வி முறை
மற்றும்
நமது பண்பாடு
ஆகியவை மாறிவிடும்.
இவை எல்லாம் மாறாமல்
பாதுகாத்திட வேண்டும் என்றால்
நமக்கெல்லாம் அரணாக இருக்கின்ற
முதலமைச்சர் அவர்களை
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச் செய்யவேண்டும்.
இல்லத்தரசி திட்டம்
அதேபோல நமது முதலமைச்சர்
தேர்தல் அறிக்கையில் அடுத்து வரும்
புதிய ஆட்சியில் ரூ.8000 கூப்பன் தருவதாக
சொல்லி இருக்கிறார்.
அந்த 8000ரூபாய் கூப்பனில்…
நீங்கள் எடுத்துச்சென்று
கடையில் கொடுத்தால்
உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த நல்லாட்சி தொடர
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
ஒசூர் மாநகராட்சியில் ...
எல்லா சாலைகள் போடப்பட்டுள்ளது.
கால்வாய்களை தூர் வாரி சீரமைத்துள்ளோம்.
தண்ணீர் பிரச்சினைகளை தீர்த்துள்ளோம்.
மத்திகிரியில் முனிராஜ், சுமன், ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம் உங்களுக்கு
சேவையாற்றி வருகிறார்கள்.
நமது முதலமைச்சர் 2-வது முறையாக
பதவியேற்க
ஒசூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு
உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும் என
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக மற்றும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
-----------------------------------------.