கெலமங்கலம்
தொட்டபேளுர் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில்
கோடை விடுமுறை முடிந்து,
பள்ளிக்கு வருகை தந்த
முதல்நாளில் மாணவர்களுக்கு
பள்ளித் தொடக்க விழாவில்
புதிய கல்வி ஆண்டிற்கான (2026-27)
விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும்
சீருடைகள் வழங்கி
உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி. ஜுன். 4. –
2026-27 கல்வி ஆண்டு தொடக்க விழா:
விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும்
சீருடைகள் வழங்கி கொண்டாட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
ஆனைக்கல் பஞ்சாயத்து
தொட்டபேளுர் கிராமத்தில் அமைந்துள்ள
ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில்
கோடை விடுமுறை முடிந்து,
ஜுன் 4-ம் தேதியன்று
பள்ளிக்கு வருகை தந்த
மாணவ, மாணவிகளுக்கு
புதிய கல்வி ஆண்டிற்கான (2026-27)
விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும்
சீருடைகள் வழங்கி
பள்ளித் தொடக்க விழா
உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர்
திரு. K. வெங்கடேசலு
அவர்கள்
தலைமையில் விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் மற்றும்
ஆசிரியர்கள் இணைந்து
நீண்ட விடுமுறைக்குப் பின்,
பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள் அனைவரையும்
மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.
விலையில்லாப் பாடபுத்தங்கள் -
சீருடைகள் வழங்கல்:
பள்ளி தொடங்கிய முதல் நாளன்றே
மாணவர்களுக்குத் தேவையான
விலையில்லா நோட்டுப் புத்தகங்கள்,
பாடப் புத்தகங்கள் மற்றும்
சீருடைகள்
முறைப்படி வழங்கப்பட்டன.
இந்தத் தொடக்க விழாவில்
பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும்
பெருந்திரளாகக் கலந்து கொண்டு
விழாவினைச் சிறப்பித்தனர்.
புதிய மாணவர்கள் சேர்க்கை:
தற்போது இப்பள்ளியில்
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
புதிய மாணவர்கள் சேர்க்கை
(New Admissions) மிக விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது.
அழகிய ஓவியங்கள்
பள்ளி தொடக்க விழாவை முன்னிட்டு
பள்ளி வளாகம் வண்ணமயமான
ஓவியங்களுடன்
(தேசியக் கொடி, விலங்குகள்,
பறவைகள் மற்றும்
விழிப்புணர்வுப் படங்கள்)
மிகவும் தூய்மையாகவும்,
மாணவர்களைக் கவரும் வகையிலும்
அழகாகப் பராமரிக்கப்பட்டு,
அனைவரின் கவனத்தையும் பெற்றது.
புதிய கல்வி ஆண்டில்
அடியெடுத்து வைக்கும்
அனைத்து மாணவர்களுக்கும்,
அர்ப்பணிப்புடன் பணியாற்றும்
ஆசிரியப் பெருமக்களுக்கும்
நல்வாழ்த்துகள்!.
-------------------------------------.