தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் 2026
85-வயதுக்கு மேற்பட்டவர்கள்
மற்றும்
மாற்றுத்திறனாளி
வாக்காளர்களுக்கு
அவர்களது விருப்பத்தின் அடிப்படையில்
வீட்டிலிருந்தபடியே
தபால் வாக்கு
செலுத்தும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச..தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஏப். 15. –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
முன்னிட்டு,
53.கிருஷ்ணகிரி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட,
கட்டிகானப்பள்ளி
புதிய வீட்டு வசதி வாரியம்,
2 வது தெரு. பாகம் எண்.204-ல்
பூத் சிலிப் வழங்கும் பணிகள்,
85-வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்
மற்றும்
54.வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஊராட்சி, முஸ்லீம் தெரு,
பாகம் எண்.134 ல் வசிக்கும்
மாற்றுத்திறனாளி
வாக்காளர் ஆகியோர்
வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு
செலுத்தும் பணிகள் நடைபெறுவதை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் இன்று (15.04.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் - 2026
நடைபெறுவதையடுத்து,
வாக்குச்சாவடிக்குச் சென்று
வாக்களிக்க முடியாத
85 வயதுக்கு மேற்பட்டவர்கள்
மற்றும் மாற்றுத்திறனாளிகள்
தங்களது வாக்குகளை
விருப்பத்தின் மூலம்
தபால் மூலம் செலுத்தலாம் என
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
தபால் வாக்கிற்கான
படிவம் "12ஷ் (12D)" வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
85 வயதுக்கு மேற்பட்டவர்களில்
2,443 வாக்காளர்களும்,
மாற்றுத்திறனாளிகளில்
1,224 வாக்காளர்களும்
அஞ்சல் முறையில் வாக்களிக்க
விருப்பம் தெரிவித்ததன் பேரில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட
ஆறு சட்டமன்ற தொகுதி தேர்தல்
நடத்தும் அலுவலர்களால்
மேற்கண்ட படிவங்கள்
கூராய்வு செய்யப்பட்டத்தில்
85 வயதுக்கு மேற்பட்டவர்களில்
2,441 வாக்காளர்களும்
மாற்றுத்திறனாளிகளில்
1,190 வாக்காளர்களும்
வாக்களிக்க தகுதியானவர்களாக
உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகுதியான வாக்காளர்களுக்கு
அவர்களது வீட்டிற்கே சென்று
அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிக்க
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும்
சேர்த்து 4 பேர் கொண்ட
74 வாக்குப்பதிவு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது
14.04.2026 மற்றும் 15.04.2026
ஆகிய இரண்டு நாட்கள்
வாக்காளர்களின்
வீட்டிற்கு வருகைபுரிந்து
வாக்குகளை பதிவு செய்யும்
பணியினை மேற்கொண்டு
வருகிறார்கள்.
இந்நிகழ்வு முழுவதும் காவல்துறை
பாதுகாப்புடன்,
வேட்பாளர்களின் பிரதிநிதிகள்
முன்னிலையில் வீடியோ பதிவு.ன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு குழுக்கள் தபால் வாக்குகள்
பெறும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
53.கிருஷ்ணகிரி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட,
கட்டிகானப்பள்ளி
புதிய வீட்டு வசதி வாரியம்,
2 வது தெரு, பாகம் எண்.204-ல்
வசிக்கும் வாக்காளர்
திருமதி.சின்னம்மாள்
க/பெ.ஒட்டிகன் (எ) பெருமாள் (வயது 97)
அவர்கள் வீட்டிலிருந்தபடியே
தபால் வாக்கு செலுத்தும் பணியை
நேரில் பார்வையிட்டு,
வாக்காளர் திரு.சுந்தர்
த/பெ.ராமமூர்த்தி அவர்களுக்கு
பூத் சிலிப் மற்றும் வாக்காளர்
கையேட்டினை வழங்கினார்.
தொடர்ந்து,
54.வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஊராட்சி, முஸ்லீம் தெரு,
பாகம் எண். 134 -ல் வசிக்கும்
மாற்றுத்திறனாளி வாக்காளர்
ஜெவஜீரா (வயது 37)
வீட்டிலிருந்தபடியே
தபால் வாக்கு செலுத்தும் பணியை
நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திரு.ஷாஜகான்.
(கிருஷ்ணகிரி),
திருமதி.கீதா ராணி
(வேப்பனஹள்ளி)
மற்றும்
துணை வட்டாட்சியர் (தேர்தல்)
திரு.சகாதேவன்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
(மண்டல அலுவலர்)
திரு.கோவிந்தராஜ்,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
திருமதி.முருகம்மாள்,
திருமதி.ராஜேஸ்வரி
கலந்துகொண்டனர்.
"தேர்தல் திருவிழா-
தமிழ்நாட்டின் பெருவிழா"
-----------------------------------------.