குருத்துவ பணியில்
30 ஆண்டுகள் நிறைவு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
மத்திகிரியில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த
புனித ஆரோக்கிய அன்னை ஆலய த்தில்
பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
அவர்களுகளின்
30 ஆண்டுகள் குருத்துவ பணி
நிறைவு விழா
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் பங்கேற்பு
ஒசூர். ஏப். 19. –
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரியில் அமைந்துள்ள
நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த
பிரசித்தி பெற்ற
புனித ஆரோக்கிய
அன்னை ஆலய
பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
அவர்களின்
குருத்துவ பணியில்
30 ஆண்டுகள் நிறைவு விழா
சிறப்பு திருப்பலியுடன்
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
மத்திகிரி குதிரைப்பாளையத்தில்,
1924-ம் ஆண்டு கட்டப்பட்ட
நூற்றாண்டுகள் பழமையான
பாரம்பரிய தூய ஆரோக்கிய
அன்னை ஆலயம்
மற்றும்
மத்திகிரி நேதாஜி நகரில்
25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள
புதிய ஆலயம்
ஆகிய இரு ஆலயங்கள்
அமைந்துள்ளது.
மத்திகிரி மற்றும் அதைச்சுற்றியுள்ள
பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நூற்றாண்டுகளாக
அருள் பாலித்து வரும்
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
1924-ம் ஆண்டு முதல்
பணியாற்றிய.....
பங்குதந்தையர்கள்
(சேலம் மறைமாவட்டம் உருவான பின்னர்)
1930 – 1931 –
அருள்திரு. பெர்த்தெயி(J.B.Bertail)
1932 -
அருள்திரு. ஷாஸேயின்(Chassain)
1933 – 1934 –
அருள்திரு. ஜெஸ்ஸோ(A.Jesseau)
1934 – 1954 –
அருள்திரு. புருன்(Brun)
1954 – 1956 –
அருள்திரு. நலே(R.Nalais)
1956 – 1957 –
அருள்திரு. பிளோன்(J.Blons)
1958–1964
அருள்திரு. குவின்கெனல்(C.Quinqueuel)
1964 –1973–
அருள்திரு. அலெக்ஸாண்டர் ஷவேலி
1973 – 1974 –
அருள்திரு. தாமஸ் கீராஞ்சிரா
1974 – 1984 –
அருள்திரு. டி.சி.ஜோசப்.
1984 – 1987 –
அருள்திரு. சி.எஸ். அந்தோணிசாமி.
1987 – 1993 –
அருள்திரு. எல். லெக்ரான்.
1993 – 2001 –
அருள்திரு. ஆர். தோமினிக்ராஜா.
2001- 2006 –
அருள்திரு. ஏ. ரொசாரியோ.
2006 – 2011 –
அருள்திரு. எம்.சக்கரையாஸ்.
2011 – 2016 –
அருள்திரு. ஜான்கென்னடி.
2016 – 2021 –
அருள்திரு. எஸ். பெரியநாயகம்.
2021 -2026 --
அருள்திரு. கிறிஸ்டோபர்.
பங்குதந்தை கிறிஸ்டோபர்
அவர்கள் மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
பங்குதந்தையாக
திருப்பணி ஆற்றிய காலகட்டத்தில்
1924-ம் ஆண்டு கட்டப்பட்ட
பாரம்பரிய அன்னை ஆலயத்தின்
நூற்றாண்டு விழா
மற்றும்
2001-ம் ஆண்டு கட்டப்பட்ட
புதிய ஆலயத்தின்
வெள்ளி விழா
மற்றும்
யூபிலி திருச்சிலுவை பவனி
ஆகிய மூன்று வரலாற்று
சிறப்புமிக்க நிகழ்வுகள்
நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நூற்றாண்டு விழா
மத்திகிரி நகரில்
1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள
வரலாற்று சிறப்புமிக்க
புனித ஆரோக்கிய அன்னை
பாரம்பரிய ஆலயத்தின்
நூற்றாண்டு விழா
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்கள் காலகட்டத்தில்
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம்
23-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய ஆலயம் புதுப்பிப்பு
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
பழைய ஆலயத்தை சீரமைத்து
புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,
ஆலயத்தின் பீடம்,
மேற்கூறை,
கதவுகள்,
ஜன்னல்கள்,
ஆலய சுவர்,
ஆலய கோபுரம்
உள்ளிட்ட பல்வேறு ஆலயம் சார்ந்த
பொருட்கள் பழுது நீக்கப்பட்டு,
வரலாற்று சிறப்புமிக்க
நினைவுச் சின்னமாக
பாரம்பரிய ஆலயம்
புதுப்பிக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிவிழா
மத்திகிரி நேதாஜிநகரில்
2001-ம் ஆண்டில்
அருட்தந்தை தோமினிக்
அவர்களால் கட்டப்பட்ட
புதிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்,
பங்குதந்தை கிறிஸ்டோபர்
அவர்களின் காலகட்டத்தில்
25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து
2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதியன்று
25-வது ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யூபிலி ஆண்டு
திருச்சிலுவை பவனி
அதேபோல இவர் பங்கு தந்தையாக
பணியாற்றிய காலகட்டத்தில்
2025 பிப்ரவரி மாதம்
யூபிலி திருச்சிலுவை
மத்திகிரி ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குருத்துவ பணியின்
30-வது ஆண்டு விழா
இப்படி தன்னுடைய இறைப்பணியில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை
சிறப்பாக நிறைவேற்றி வரும்
மத்திகிரி புனித ஆராக்கிய அன்னை ஆலய பங்குதந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
அவர்களின்
குருத்துவ பணியின்
30-வது ஆண்டு நிறைவு விழா
மத்திகிரி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஏப்ரல் 19-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
30-ஆண்டு குருத்துவ பணி நிறைவு
சிறப்பு திருப்பலியில்
தருமபுரி மறைமாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் பங்கேற்று
சிறப்பு திருப்பலி பூஜை செய்து,
சிறப்பு மறையுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஆயர் அவர்கள்
பேசும் போது…
குருத்துவ பணியில்
30 ஆண்டுகளை
நிறைவு செய்த
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்களை வாழ்த்தியதுடன், அவரை
தருமபுரி மறைவட்ட
முதன்மை குருவாக
நியமிப்பதாக கூறினார்.
அப்போது இறை மக்கள் அனைவரும்
கைகளை தட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில்
மறைக்கல்வி மாணவர்கள் பங்கேற்ற நடனம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து
குருத்துவத்தில் 30 ஆண்டுகள்
வெற்றி சகாப்தம் படைத்த
அருட்பணி கிறிஸ்டோபர் அடிகளார்
அவர்களுக்கு
வாழ்த்து மடல்
வாசிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து
அருட்கன்னியர்கள்,
பங்கு குழுவினர்,
பாடல்குழுவினர்,
வின்சென்ட் தேபவுல் சபையினர்,
அன்பியங்கள்,
சார்பில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்களுக்கு
நினைவு பரிசு
வழங்கப்பட்டது.
இந்த விழாவில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்களின் சொந்த ஊரான
எலத்தகிரியில் இருந்து
அவரது குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்த்துரை
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
தாளாளர் - முதல்வர்
மற்றும்
ஓசூர் மறைவட்ட
முதன்மை குரு
அருட்பணி. பெரியநாயகம்
அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்கள்
கடந்த 5 ஆண்டுகளாக நம்மோடு இருக்கிறார். ஆனால் நாங்கள் இரண்டுபேரும்
பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்தோம்.
நான் பள்ளிப்படிப்பை முடித்து
உயர்படிப்பை தொடர
பெங்களுர் சென்று விட்டேன்.
அவர் கோயம்புத்தூர் சென்றுவிட்டார்.
பின்பு ஒரே மறைமாவட்டத்தில்
ஒன்றாக பணி புரிகின்றோம்.
கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தோம்.
வாழ்த்து மடலில்
அவரின் சிறப்புகளை வாசிக்க கேட்டீர்கள்.
அமைதியாக, செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் செய்யக்கூடியவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக
சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.
குருத்துவ பணி என்பது எளிதான காரியமல்ல.
கடவுளின் அருள் கரம்,
அவரை கரம் பிடித்து
வழிநடத்தியதால் தான்
இந்த 30 ஆண்டு குருத்துவ பணியை
நிறைவு செய்துள்ளார்.
அவருக்கு பாராட்டுகளை
தெரிவிப்போம்.
இந்த நல்ல நாளில்
ஒசூர் மறைவட்டம் சார்பாகவும்,
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின் சார்பாகவும்,
ஆசிரியர்கள்,
மாணவச்செல்வங்கள்,
பணியாளர்கள்,
பெற்றோர்
மறை மக்கள் சார்பாகவும்,
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகிறேன்.
இவ்வாறு
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
தாளாளர் - முதல்வர்
மற்றும்
ஒசூர் மறைவட்ட முதன்மைகுரு
அருட்பணி. பெரியநாயகம்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நன்றியுரை
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
அவர்கள்
நன்றியுரையாற்றினார்.
அறுசுவை உணவு
30-வது ஆண்டு குருத்துவ பணி
நிறைவு பாராட்டு விழாவில்
அனைவருக்கும் அறுசுவை உணவு
வழங்கப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில்
அருட்பணி ஜோசப் ரொசாரியோ,
அருட்பணி அன்பு
அருட்சகோதரிகள் .
ஆலய பங்கு குழுவினர்
பாடல் குழுவினர்
மற்றும் பங்கு மக்கள் பங்கேற்றனர்.
-------------------------------------.