ஒசூர் மிடுகரப்பள்ளி
ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோயில்
தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
1000 ஆண்டுகள் பழமையான
மிடுகரப்பள்ளி
ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோயில்
தேர்த்திருவிழா
தாய் வீட்டு சீதனங்களுடன்
மேளதாளங்கள் முழங்க
அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்ட
சுயம்பு மாரியம்மன்
ஓசூர். ஏப்ரல். 08. –
சுயம்பு மாரியம்மன் கோயிலில்
தேரோட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மிடுகரப்பள்ளியில்
1000 ஆண்டுகள் பழமையான
பிரசித்திப் பெற்ற
சுயம்பு மாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா தேரோட்டம்
சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மிடுகரப்பள்ளியில்
ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலை,
ஐடிஐ அருகே
1000 ஆண்டுகள் பழமையான
பிரசித்திப்பெற்ற
ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக்கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மிடுகரப்பள்ளி பசவேஸ்வரா
சுவாமிக்கு மாவிளக்கு பூஜை
2026-ம் ஆண்டு தேர்த்திருவிழா முன்னிட்டு
ஏப்ரல் 4-ம் தேதியன்று
மிடுகரப்பள்ளி
பசவேஸ்வர சுவாமிக்கு
மாவிளக்கு பூஜையுடன்
தேர்த்திருவிழா தொடங்கியது.
தாய் வீடான மிடுகரப்பள்ளியில்
இருந்து சுயம்பு மாரியம்மன்
புறப்பட்டு செல்லும் தேரோட்டம்
நிகழ்வுகள் ஏப்ரல் 08-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
தேரோட்டத்தை முன்னிட்டு
தாய் வீடான மிடுகரப்பள்ளிக்கு
வருகை தந்த சுயம்பு மாரியம்மனுக்கு பசவேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
சுயம்பு மாரியம்மனுக்கு
தாய் வீட்டு சீர்வரிசை
அதைத்தொடர்ந்து
அலங்கரிக்கட்ட தேரில்
சுயம்பு மாரியம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார்.
அப்போது தாய் வீட்டில் இருந்து புறப்பட்ட
சுயம்பு மாரியம்மனுக்கு
மிடுகரப்பள்ளி மக்கள்
பட்டுப்புடவை,
மஞ்சள் குங்குமம்,
பழம்,
தேங்காய்,
வெல்லம்,
மடிஅரிசி,
உள்ளிட்ட சீர் வரிசைகளை
மேளதாளத்துடன் எடுத்து வந்து
வழங்கி, சிறப்பு பூஜை செய்து
வழிபட்டனர்.
சுயம்பு மாரியம்மன் எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட தேர்
மேளதாளம் முழங்க
மிடுகரப்பள்ளி
பசவேஸ்வர சுவாமி கோயிலில்
இருந்து புறப்பட்டு,
அரசு கல்லூரி சாலை,
தேன்கனிக்கோட்டை சாலை,
வழியாக பயணித்து இறுதியில்
ஐடிஐ அருகே உள்ள
சுயம்பு மாரியம்மன் கோயில் முன்பு தேரோட்டம் நிறைவடைந்தது.
இந்த தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மிடுகரப்பள்ளி, தின்னூர், நவதி, அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தேர்த்திருவிழாவில்
ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி மற்றும் பெங்களுரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------.