சூளகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்
ஊராட்சித்துறை சார்பாக
ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில்
நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஜுன். 5. -
சூளகிரி ஒன்றியம்
வளர்ச்சித்திட்டப்பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
செம்பரசனப்பள்ளி,
சூளகிரி,
இம்மிடிநாயக்கனப்பள்ளி
ஊராட்சிகளில்
ஊரக வளர்ச்சித்துறை சார்பாக,
ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில்
நடைபெற்று வரும்
வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும்
அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையம்,
மதிய உணவு திட்ட செயல்பாடுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (05.06.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
செம்பரசனப்பள்ளி ஊராட்சி, பெரியபாப்பனப்பள்ளி கிராம
ஆற்றின் குறுக்கே,
கட்டிகானப்பள்ளி முதல்
பெரியபாப்பனப்பள்ளி கிராமம் வரை
செல்லும் சாலையில்
கனிமம் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ்,
ரூ.45 லட்சம் மதிப்பில்
17 மீட்டர் தூரத்திற்கு பாலம்
கட்டுமான பணிகளை
நேரில் பார்வையிட்டார்.
இப்பாலம் அமைப்பதனால்
சின்னபாப்பனப்பள்ளி,
பெரிய பாப்பனப்பள்ளி,
சர்க்காரலு
ஆகிய கிராமங்களில் உள்ள
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,
பொதுமக்கள் பயனடைவார்கள்.
இப்பால பணிகள் முடியும் தருவாயில் இக்கிராமத்திற்கு கூடுதலாக
சாலை அமைக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து,
சூளகிரி ஊராட்சி,
தொட்டி கிராமத்தில்,
பசுமை பாரத இயக்க திட்டத்தின் கீழ்,
ரூ.3 கோடி மதிப்பில்,
கசடு சுத்திகரிப்பு மையம்
கட்டுமான பணிகளை நேரில்
பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
இந்த சுத்திகரிப்பு மையம் மூலம்
சூளகிரி சுற்றியுள்ள
41 கிராம மக்கள் தங்கள் வீடுகளில்
சேகரிக்கும் கசடுகளை
சுத்திகரிக்கப்படும்.
தொடர்ந்து,
இம்மிடிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளியில்
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
வழங்க தயார் செய்யப்பட்ட
மதிய உணவான
சாதம்,
சாம்பார்,
முட்டை
ஆகியவற்றை பார்வையிட்டு,
உணவின் தரத்தை சாப்பிட்டு
ஆய்வு செய்தார்.
தொடர்ந்து,
கடந்த 2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற
10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில்
இப்பள்ளி தேர்ச்சி விகிதம்
குறைந்ததையடுத்து,
பள்ளி தலைமையாசிரியர்,
கணிதம், வேதியியல், இயற்பியல்
உள்ளிட்ட பாட ஆசிரியர்களிடம்
தங்களது பாடத்திட்டத்தில்
தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான
காரணங்களை கேட்டறிந்தார்.
மேலும்,
வேதியியல் பாடத்தில்
அதிக மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
குறைந்ததையடுத்து
அப்பாட ஆசிரியர் மீது
நடவடிக்கை மேற்கொள்ள
மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
கடந்த தேர்வில் தோல்வியடைந்த
மாணவர்களுக்கு துணைத்தேர்வில்
தேர்ச்சிபெற ஏதுவாக
சிறப்பு வகுப்புகள் நடத்த
அறிவுறுத்தினார்.
மேலும்,
தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளை தொடர்ச்சியாக கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,
மாணவர்களின் வருகை பதிவேடு,
ஆசிரியர்கள் வருகை பதிவேடு,
தினசரி பாடத்திட்டங்கள்
வகுப்புகள் நடைபெறுவது குறித்து
கேட்டறிந்தார்.
இந்த ஆண்டு வரும் தேர்விற்கு
ஒவ்வொரு மாணவரையும்
தொடர் கண்காணிக்கப்பட்டு,
பாடத்திட்டங்களை நடத்த வேண்டும்.
2026- 27 ம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்வில்
இப்பள்ளி 100 சதவிகிதம்
தேர்ச்சி பெற ஆசிரியர்கள்
முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில்
இப்பள்ளியில் பயின்ற 72 மாணவர்கள் தேர்ச்சிபெற்றதையடுத்து,
அவர்கள் உயர்கல்வி சேர்வதை
உறுதிபடுத்த வேண்டும்.
வருமான சான்று,
சாதிச்சான்று,
இருப்பிட சான்று,
தமிழ்வழிச் சான்று,
ஓபிசி சான்று
ஆகியவை கோரி மாணவர்கள் விண்ணப்பித்தவுடன்
24 மணிநேரத்திற்குள் வழங்க
வட்டாட்சியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
ஊரக வளர்ச்சித்துறை
செயற்பொறியாளர்
திரு.மோகன சுந்தரம்,
உதவி செயற்பொறியாளர்
திரு.சுப்ரமணி,
மாவட்ட கல்வி அலுவலர் (பொ)
திரு.கிருஷ்ணன்,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.முகுந்தா,
ஒன்றிய பொறியாளர்கள்
திரு.கோவிந்தராஜ்,
திரு.செல்வம்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்,
பணி மேற்பார்வையாளர்கள்
திருமதி.விஜயா,
திருமதி.ரோஜா,
பள்ளி தலைமையாசிரியர்
திருமதி.ஈஸ்வரி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
----------------------------------------------.