கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திமுக வேட்பாளர்
அறிமுக கூட்டம்.
ஒசூர் மேயர் S.A. சத்யா
அவர்களை தெரியாதவர்கள் யாரும் இல்லை.
இது அறிமுக கூட்டம் இல்லை .
அவரை அனைத்து கட்சித்தலைவர்கள்
வாழ்த்தும் கூட்டம்
இந்த கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி
திமுக ஆட்சியில்
ஒசூர் தொகுதியில் பல ஆயிரம் கோடிக்கு
வளர்ச்சித்திட்டப்பணிகள் செய்துள்ளோம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
6 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
மீண்டும் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக வருவார் –
எம்எல்ஏ Y. பிரகாஷ் பேச்சு.
ஒசூர், ஏப்.6. -
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
ஒசூர் சட்டமன்ற தொகுதி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின்
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அறிமுக கூட்டம்
திமுக, காங்கிரஸ், தி.க, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட
கூட்lணியில் உள்ள 25 கட்சிகளின்
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒசூர் மாநகராட்சி
ரயில் நிலைய சாலையில் உள்ள
மீரா மஹாலில் நடந்த
இந்த அறிமுக கூட்டத்திற்கு
தொகுதி பொறுப்பாளர்
பார்.இளங்கோவன்
தலைமை வகித்தார்.
ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ்,
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர்
கோபிநாத்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதியின்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திமுக வேட்பாளர் S.A.சத்யா
அவர்களை அறிமுகப் படுத்தி
ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் பேசியதாவது,
வாழ்த்தும் கூட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
மதசார்பற்ற கூட்டணி கட்சி
வேட்பாளர் சத்யாவை அறிமுகப்படுத்தும்
கூட்டம் இது.
ஆனால் அவரை தெரியாதவர்கள்
யாரும் இருக்க மாட்டார்கள்.
அனைவரும் இவரை அறிவார்கள்.
அதனால் இது வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இல்லை.
அவரை கூட்டணி கட்சி தலைவர்கள்
வாழ்த்தும் கூட்டம்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
பலம் வாய்ந்த கூட்டணி
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள்
பல தேர்தல்களை ஒன்றாக இணைந்து சந்தித்துள்ளன.
தற்பொழுது மேலும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து
திமுக கூட்டணியில் இணைந்துள்ளன.
அதைப்போல தலைவர்களும்
திமுக கூட்டணிக்கு வந்துள்ளனர்.
அந்த அளவிற்கு கூட்டணி கட்சி தலைவர்களை அரவணைத்து செல்லும் தலைவர்
நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணி.
இந்த தேர்தல் மிகப் பெரிய சவாலான தேர்தல்.
இது தமிழகத்திற்கும் டில்லிக்குமான தேர்தல்
என முதல்வர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதில் தமிழ்நாடுதான் வெற்றி பெறும் எனவும் கூறி வருகிறார்.
இன்னும் தேர்தல் நடைபெற 15 நாட்கள் தான் உள்ளது.
இந்த 15 நாட்கள்
ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும்.
ஏற்கெனவே கடந்த 6 மாத காலமாக
திமுகவினர் தேர்தல் வேலைகளை செய்து வருகின்றோம்.
பூத் கமிட்டி போட்டுள்ளோம்.
பிஎல்2, பிடிஏ, பிஎல்சி ஆகியவை அமைத்து தேர்தலுக்கு தயார் நிலையில் கட்சி கட்டமைப்பை பலமாக தயார் செய்துள்ளோம்.
நமது கட்டமைப்பு போல் எதிரணியில் கட்டமைப்பு இல்லை.
நமது கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.
25 கட்சிகள் நமது கூட்டணியில் உள்ளன.
கூட்டணி கட்சி தலைவர்கள்
பலம் மிக்கவர்கள்.
முதல்வர்
தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
ஒசூர் தொகுதியில் பல ஆயிரம் கோடிக்கு வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்துள்ளோம்.
இதனை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலின்தான் மீண்டும்
தமிழக முதல்வராக வருவார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.
ஒசூர் S.A.சத்யா,
தளி T. ராமச்சந்திரன்,
வேப்பனஹள்ளி சீனிவாசன்,
கிருஷ்ணகிரி செல்லகுமார்
ஊத்தங்கரை குப்புசாமி
பர்கூர் மதியழகன்
ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும்
என எம்எல்ஏ Y. பிரகாஷ் பேசினார்.
இந்த கூட்டத்தில்
திமுக மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ்,
மாவட்ட பொருளாளர் சுகுமாறன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
எல்லோராமணி,
காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளர்
நீலகண்டன்,
சிபிஐ மாநில குழு உறுப்பினர்
மாதையன்,
மதிமுக மாநகரச் செயலாளர்
ராமச்சந்திரன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி
ராமச்சந்திரன்,
தேமுதிக மாவட்ட பொறுப்பாளர்
சரவணன்,
மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
------------------------------------.