தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
தேர்தலில் 100 சதவிகிதம்
வாக்குப்பதிவு வலியுறுத்தி
மாபெரும் விழிப்புணர்வு
நடைபயண பேரணியை,
ஓசூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் பொது பார்வையாளர்
திரு.பண்வே ராகுல் துக்காராம்
இ.ஆ.ப.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர்
19-04-2026 -ம் தேதியன்று
கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஒசூர். ஏப். 19. -
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
"தேர்தல் திருவிழா
தமிழகத்தின் பெருவிழா"
என்ற தலைப்பின் கீழ்,
100 சதவிகிதம் வாக்குப்பதிவு
வலியுறுத்தி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி,
காமராஜ் காலனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
ஒசூர், தளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் பொது பார்வையாளர்
திரு.பண்வே ராகுல் துக்காராம்
இ.ஆ.ப.
அவர்கள்,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர்
இன்று (19.04.2026) விழிப்புணர்வு
நடை பயணம் மற்றும்
கலைநிகழ்ச்சிகளை
கொடியசைத்து துவக்கி வைத்து
நடைபயணத்தில் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்-2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில்,
கையெழுத்து இயக்கம்,
உறுதிமொழி,
விழிப்புணர்வு பேரணி,
ஒட்டுவில்லைகள்,
எல்.இ.டி. வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு,
இருசக்கர வாகன பேரணி,
கோலப்போட்டி,
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டிகள்,
செல்பி பாயிண்ட்,
விழிப்புணர்வு முத்திரை,
சிறுதானிய விதைகள் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகம்,
விவசாயிகள் கலந்து கொண்ட டிராக்டர், மாட்டுவண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பிரச்சார பேரணிகள்,
சிலம்பாட்டம்,
வாக்காளர்கள் விழிப்புணர்வு பாடல்
உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாபெரும்
விழிப்புணர்வு
நடைபயண பேரணி
அதனைத்தொடர்ந்து இன்று (19.04.2026)
ஒசூர் மாநகராட்சி காமராஜ் காலனி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து,
ஓசூர் தொழிற்சாலைகள் சங்கம்
மற்றும்
ஒசூர் குடியிருப்போர் நல சங்கம்
சார்பாக
100 சதவிகிதம் வாக்குப் பதிவு
குறித்து சுமார் 2000 மேற்பட்ட
தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,
மாணவ, மாணவியர்கள்,
பொதுமக்கள்
கலந்துக்கொண்ட விழிப்புணர்வு
நடைபயண பேரணி நடைபெற்றது.
இப்பேரணியானது
காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கி,
இராயக்கோட்டை சாலை,
நேதாஜி சாலை,
உழவர் சந்தை சாலை
என முக்கிய சாலை வழியாக
சுமார் 2.50. கி.மீட்டர் தூரத்திற்கு
நடைபயணம் மேற்கொண்டு
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
வளாகத்தில் நிறைவடைந்தது.
எனவே ஒசூர் சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
பதிவான வாக்கு எண்ணிக்கையை விட
தற்போது நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகபடியாக
வாக்களிக்க வேண்டும்.
ஏப்ரல் 23.04.2026 நடைபெறவுள்ள
சட்டமன்ற தேர்தலில்
அனைத்து வாக்காளர்களும்
தங்களது இடது ஆள்காட்டி
விரலில் மை இருப்பதை
உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் மட்டும்மல்லாது
உங்கள் உறவினர்கள், நண்பர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று
வாக்களிக்க உறுதி செய்ய வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
100 சதவிகிதம் வாக்களிப்பதின்
அவசியம் குறித்து
நாட்டுப்புற கலை,
சிலம்பாட்டம்,
ஸ்கேட்டிங்,
நடன கலைஞர்களின் நிகழ்ச்சி,
இசைக்குழுவினரின் இசை
நடைபெற்றது.
அதனை தொடர்ந்து
மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்ட
மூன்று சக்கர வாகன பேரணி
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் மாநகராட்சி ஆணையர்
திரு.முகமது ஷபீர் ஆலம்
இ.ஆ.ப.,
ஒசூர் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை அலுவலர்
திரு.முருகேசன்,
மாவட்ட விளையாட்டு அலுவலர்
திரு. நடராஜமுருகன்,
வட்டாட்சியர்
திரு.குணசிவா,
ஓசூர் தொழில் கூட்டமைப்பு தலைவர்
திரு.ரமேஷ்,
மற்றும் தொழிற்சாலை சங்க உறுப்பினர்கள்,
மனித வள மேம்பாட்டு கழகம்,
ஒசூர் மக்கள் நல சங்க பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள்,
தொண்டு நிறுவன பிரதிநிதிகள்
கல்லூரி மாணவ மாணவியர்கள்,
பொதுமக்கள் ,
அரசுத்துறை அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
----------------------------------------.