கல்பனா சாவ்லா
விருது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வீர சாகசப் பணிகள் புரிந்த பெண்கள்
கல்பனா சாவ்லா விருது பெற
19.06.2026 -க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 8. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வீர சாகசப் பணிகள் புரிந்த பெண்கள்
கல்பனா சாவ்லா விருது பெற
19.06.2026 -க்குள்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வீர சாகசப் பணிகள்
புரிந்த பெண்களை
கௌரவிக்கும் பொருட்டு
ஒவ்வொரு ஆண்டும்
சுதந்திர தினவிழா அன்று
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால்
கல்பனா சாவ்லா விருது
வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து
2026 ஆம் ஆண்டிற்கான
கல்பனா சாவ்லா விருதிற்கான
விண்ணப்பங்களை,
தாங்கள் செய்த வீரதீர சாகச பணிகளை
உரிய தகவலுடன்,
(https://award.tn.gov.in) என்ற
தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்
19.06.2026 -க்குள் பதிவு செய்திடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு
கிருஷ்ணகிரி மாவட்ட சமூகநல அலுவலகம்,
அறை எண் 21 -ல் தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.