“என் வாக்கு
என் உரிமை”
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
100 % வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு நாடகம்
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தல் - 2026ஐ முன்னிட்டு
TEAL நிறுவனத்தின் சார்பில்
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில்
தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்த
விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.
ஒசூர். ஏப். 10. –
ஒசூர் TEAL நிறுவனம் சார்பில்
விழிப்புணர்வு நாடகம்
55 - ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
மக்களிடையே தேர்தலில் 100 வாக்களிக்க
வேண்டும் என்று வலியுறுத்தி
“என் வாக்கு என் உரிமை”
என்ற தலைப்பில்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
TEAL நிறுவனத்தின் மூலம்
தேர்தல் விழிப்புணர்வு நாடகம்
ஏப்ரல் 10-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த தேர்தல் விழிப்புணர்வு நாடகம்
ஓசூர் ரயில் நிலையம்,
ஓசூர் பேருந்து நிலையம்,
ராமநாயக்கன் ஏரி பூங்கா
ஆகிய பொதுமக்கள் அதிகமாக கூடும்
பகுதிகளில் நடைபெற்றது.
தேர்தல் விழிப்புணர்வு
பாடல்கள்
தேர்தல் விழிப்புணர்வு வாகனம் மூலமாக
100% வாக்களிப்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட
விழிப்புணர்வு பாடல்களும் இசைக்க பட்டது.
தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா
------------------------------------------.