தேர்தல் நாளில் (23-04-26)
கட்டணமில்லா பேருந்து
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்
23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்,
பார்வை குறைபாடு மற்றும்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும்,
சாதாரண நகரப் பேருந்துகளில்
கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார். இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 17. -
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்
23.04.2026 அன்று
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்,
பார்வை குறைபாடு மற்றும்
அனைத்து வகை
மாற்றுத் திறனாளிகளுக்கும்,
சாதாரண நகரப் பேருந்துகளில்
கட்டணமில்லாமல் பயணம்
மேற்கொள்ள ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
23.04.2026 அன்று நடைபெறும்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில்
அனைத்து தரப்பு மக்களும் வாக்களிப்பதை
உறுதி செய்யும் வகையில்
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்,
பார்வை குறைபாடு மற்றும்
அனைத்து வகை
மாற்றுத் திறனாளிகளுக்கும்
சாதாரண நகரப் பேருந்துகளில்
கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே,
60 வயதிற்கு மேற்பட்ட
மூத்த குடிமக்கள், பார்வை குறைபாடு
மற்றும்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
அனைவரும்,
தேர்தல் நாளன்று
ஆதார் அட்டை மற்றும்
வாக்காளர் தகவல் சீட்டு அல்லது
வாக்காளர் அடையாள அட்டை
ஆகியவற்றை காண்பித்து
நகரப் பேருந்துகளில்
கட்டணமின்றி பயணம்
செய்து தங்களது வாக்கினை செலுத்த
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார்.இஆப
அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருவிழா-
தமிழ்நாட்டின் பெருவிழா"
-----------------------------------------.