கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
புக்கசாகரம் கிராமத்தில்,
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி,
Schaeffler இந்தியா லிமிடெட் நிறுவனம்
சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ்,
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி. ஜுன். 5. –
உலக சுற்றுச்சூழல் தினம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
புக்கசாகரம் கிராமத்தில்,
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி,
Schaeffler இந்தியா லிமிடெட் நிறுவனம்
சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ்,
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (05.06.2026)
துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல்
தினத்தை முன்னிட்டு,
மரக்கன்றுகளை நட்டு,
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி,
நெகிழிப் பயன்பாட்டை குறைத்து
இயற்கை வளங்களையும்,
சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட
உறுதியேற்போம் என்றும்,
சிறிய முயற்சிகளே
நாளைய தலைமுறைக்கு
பாதுகாப்பான ஆரோக்கியமான
மற்றும்
பசுமையான உலகை
உருவாக்க வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
இன்று ஜூன் 5-ம் தேதி
உலக சுற்றுச்சூழல் தினம்
கடைப்பிடிக்கப்படுவதையொட்டி,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
புக்கசாகரம் கிராமத்தில்,
Schaeffler இந்தியா லிமிடெட் நிறுவனம்
சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ்
34 ஏக்கர் பரப்பளவில்
120- க்கும் மேற்பட்ட
நாட்டு மர வகைகளை கொண்டு
சுமார் 1,12,500 மரக்கன்றுகள்
நடவு செய்யப்பட்டு ஆரண்யம் எனும்
சுற்றுச்சூழல் மண்டலத்தை
பயோட்டா சாயில் நிறுவனம் மூலம்
உருவாக்கி வருகிறது.
இத்திட்டத்தில் சரிவான பகுதிகளில்
மண் அரிமானத்தை தடுக்கும் வகையில்
50 -க்கும் மேற்பட்ட உதிரி கற்கள்
தடுப்பணைகள் புதியதாக
உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அப்பகுதியில் இருந்த
3 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு,
கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்நிலைகளுக்கு இயற்கையாக
சுனைநீர் மூலம் நீர் நிரம்பும் வகையில்
கால்வாய் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,
தொரப்பள்ளியில்
1,50,000 மரக்கன்றுகள்,
பில்லனகுப்பம் பகுதியில்
58,000 மரக்கன்றுகள்,
கத்திரிப்பள்ளி பகுதியில்
25,000 மரக்கன்றுகள்,
புக்கசாகரம் பகுதியில்
1,12,500 மரக்கன்றுகள்
என மொத்தம் 3,45,500 மரக்கன்றுகள்
நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும்,
வனத்துறை,
ஊரக வளர்ச்சித்துறை
மூலம்
ஏரி, குளம், குட்டை மற்றும்
அரசுக்கு புறம்போக்கு நிலங்களில்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும்
வனத்துறையின் சார்பில்
மரக்கன்றுகள் நடவு செய்து
பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
ஊரக வளர்ச்சித்துறை
செயற்பொறியாளர்
திரு.மோகன சுந்தரம்,
உதவி செயற்பொறியாளர்
திரு.சுப்ரமணி,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.முகுந்தா,
ஒன்றிய பொறியாளர்கள்
திரு.கோவிந்தராஜ்,
திரு.செல்வம்,
பணி மேற்பார்வையாளர்கள்
திருமதி.விஜயா,
திருமதி.ரோஜா,
நீர்வடிப்பகுதி உதவி பொறியாளர்
திரு.சரவணன்,
BiotaSoil பவுண்டேஷன் நிறுவனர்
திரு.செந்தில் முருகன்,
Schaeffler India நிறுவன
மேலாளர் பொறுப்பு நிதி)
திரு.பரத்,
பொதுமேலாளர்கள்
திரு.நாகராஜ்,
திரு.கோபி
ஆகியோர் கலந்துகொண்டனர்.
-------------------------------------------------.