ஜோதி தமிழ்
செய்திகள்
இணையஇதழ்
மலர்-2-இதழ்கள்-216
கிருஷ்ணகிரி மாவட்டம்
சமுதாய வங்கி
ஒருங்கிணைப்பாளர் –
92 காலி பணியிடங்களுக்கு
விண்ணப்பித்து
பயனடையுமாறு
கலெக்டர் தகவல்
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
சமுதாய வங்கி
ஒருங்கிணைப்பாளர் –
92 காலி பணியிடங்களுக்கு
விண்ணப்பித்து
பயனடையுமாறு
கலெக்டர் தகவல்
செய்தி ஆசிரியர் - ஜோதி ரவிசுகுமார்,M.A.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் –
92 காலி பணியிடங்களுக்கு
விண்ணப்பித்து பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 03. –
சமுதாய வங்கி
ஒருங்கிணைப்பாளர் -
92 காலி பணியிடங்களுக்கு
விண்ணப்பம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் -
92 காலி பணியிடங்களுக்கு
விண்ணப்பித்து பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை
அலகின் கீழ் செயல்படும் ஒவ்வொரு
50 சுய உதவிக்குழுக்களுக்கு
ஒரு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்
(கடன் மற்றும் வங்கி சேவைகள்)
தற்காலிக பணியிடங்களுக்கு
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
இதன் மூலம் பணி நிரந்தரம்
அல்லது
வேறு சலுகைகள்/ முன்னுரிமை
ஏதும் கோர இயலாது.
1. சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்றுத் தருதல் மற்றும் வாராக்கடன் வசூல் செய்தல்.
2. நிதி கல்வி அளித்தல்.
3. காப்பீடு திட்டங்களின் சேவைகள் வழங்குதல்.
4. மின்னணு நிதி சேவை வழங்குதல்,
5. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தனிநபர் தொழில் கடன் பெற வழிவகை செய்தல்.
தேர்வு பெறும் நபர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் கீழ் செயல்படும் சுய உதவிக்குழுக்களுக்காக மேற்கண்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
சமுதாய வங்கி
ஒருங்கிணைப்பாளருக்கான
தகுதிகள்:
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவே அல்லது தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராக பணி இருத்தல் கூடாது.
தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். (உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்).
மலை பகுதியிலுள்ள ஆதி வாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத நிலையில் ஆண் உறுப்பினரை மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம்.
விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ்
இருத்தல் வேண்டும்.
12 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
வாராக் கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருக்க கூடாது.
மலை பகுதிகளில் 12 வது வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாக கருதப்படலாம்.
தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
வங்கிகளுக்கு சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஆண்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whats app ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
தேர்வு முறை:
வங்கி இதன் அடிப்படையில், மாவட்ட திட்ட இயக்குநர், சமுதாய ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தெடுக்க தகுதியான சுய உதவிக் குழு உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வாயிலாகவும் மற்றும் உரிய விளம்பரம் மூலமாகவும் பெற்று, சான்றிதழ்களை சரிபார்த்து, தகுதியிருப்பின் எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும்.
பணி ஒதுக்கீடு முறை :
மாவட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் ஒரு வருடத்திற்கு மட்டும் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட வேண்டும். பணித்திறனின் அடிப்படையில் அடுத்தடுத்த வருடங்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணையானது புதுப்பிக்கப்படும்.
மதிப்பூதிய விவரம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திலிருந்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு விடுவிக்கப்படும் மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம்
ரூ.2500/- ஐ சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திலிருந்து வழங்கப்படும் அடிப்படை மாதாந்திர மதிப்பூதியம் தவிர, காப்பீடு இழப்பீட்டு தொகை பெற்று வழங்கியதற்கான ஊக்கத்தொகை மற்றும் நிதி கல்வி முகாம் (FL Camp) நடத்துவதற்கான மதிப்பூதியம் ஆகியவையும் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் வழங்கப்படும்.
பணி விதிமுறைகள்:
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF Office) அலுவலகத்திற்கு தினசரி ஆஜராகி, வட்டார ஒருங்கிணைப்பாளர் (நிதி மேலாண்மை) அவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் சிறப்பு விடுப்பாக வழங்கப்படலாம் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து).
பணி விபர அறிக்கையை பெற்றபின் தான் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3 ம் தேதி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பின் வாயிலாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு
மதிப்பூதியம் விடுவிக்கப்பட்டு, பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணி விபரம் மற்றும் விடுப்பு விவரம் போன்றவைகள் மண்டல வட்டார ஒருங்கிணைப்பாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். இதன் விவரத்தினை மாதாந்திரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு தெரிவிக்க வேண்டும்.
கடமைகள் மற்றும் பொறுப்புகள்:
1. சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் கடன் விண்ணப்பங்கள், அதற்கான ஆவணங்களை வங்கிகளுக்கு அனுப்புவது.
2. வங்கி கடனை முறையாக திரும்பி செலுத்த தேவையான ஆலோசனைகளை சுய உதவிக் குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கி வங்கியினுடைய கடன் திருப்பத்தை கண்காணிக்க வேண்டும்.
3. PMJJBY, PMSBY, CM-CHIS மற்றும் APY போன்ற காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் சுய உதவிக் குழு உறுப்பினர்களை பதிவு செய்தல் மற்றும் இழப்பீட்டு தொகையை பெறுவதற்காக உதவுதல்.
4. சுய உதவிக்குழுக்களுக்கு நிதி கல்வி முகாம் நடத்துதல்.
5. பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கான (Women Led Enterprises) தொழிற்கடன் / முத்ரா கடன் விண்ணப்பங்களை ஆவணங்களுடன் வங்கிக்கு அனுப்புதல் மற்றும் இணையதளம் / செயலியில் பதிவேற்றம் செய்து கடன் பெற்றுத் தருதல் மற்றும் கண்காணித்தல்.
6. மின்னணு நிதி சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
விண்ணப்பம்
அனுப்பப்பட வேண்டிய
முகவரி
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
எண்.11, தரைத்தளம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்,
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம்,
கிருஷ்ணகிரி-635 001.
தொலைபேசி எண் :
04343-235267.
மேற்கண்ட முகவரிக்கு
விண்ணபத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------.