ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி சட்டமன்றத் தொகுதி
பிஜேபி வேட்பாளர்
டாக்டர். நாகேஷ்குமார்,
ஆந்திர மாநில சுகாதாரத்துறை
அமைச்சர்
மற்றும்
தேசிய ஜனநாயக கூட்டணி
கட்சிகளின் ஆதரவாளர்களுடன்
பேரணியாக சென்று
வேட்பு மனு தாக்கல்.
தேன்கனிக்கோட்டை. ஏப். 6. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி சட்டமன்றத் தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணியின்
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்
டாக்டர் நாகேஷ் குமார்,
ஆந்திர மாநில சுகாதாரத்துறை
அமைச்சர்
திரு. சத்தியகுமார் யாதவ்
மற்றும் ஆதரவாளர்களுடன்
பேரணியாக சென்று
தேன்கனிக்கோட்டை
வட்டாட்சியர் அலுவலகத்தில்
வேட்புமனு தாக்கல் செய்தார்.
தளி சட்டமன்றத் தொகுதியில்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த
டாக்டர் நாகேஷ் குமார்
போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய
இறுதி நாளான ஏப்ரல் 6-ம் தேதியன்று
டாக்டர் நாகேஷ் குமார்
அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று
தனது வேட்பு மனுவை
தேன்கனிக்கோட்டை
வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர்
திரு. பழனி
அவர்களிடம் முறைப்படி தனது
வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன்
ஆந்திர மாநில
சுகாதாரத்துறை அமைச்சர்
திரு. சத்தியகுமார் யாதவ்
மற்றும் அதிமுக பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மனு தாக்கல் பிறகு
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
ஆந்திர அமைச்சர் கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என திட்டவட்டமாக கூறினார்.
மேலும், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர்,
தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும்,
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி திமுகவினரை விமர்சித்தார்.
மத்திய அரசின் ‘உத்யம்’ தரவுகளின்படி, தமிழகத்தில் 15,000 MSME நிறுவனங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தளி தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் எவ்வித முன்னேற்றத்தையும் செய்யவில்லை என்றும், குறிப்பிட்டார்.
“பிரதமர் மோடி
மற்றும்
சந்திரபாபு நாயுடு
அவர்களின்
பிரதிநிதியாக நான் வந்துள்ளேன்.
தளி தொகுதியின் வளர்ச்சிக்கும்,
இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும்
மருத்துவப் பணியைத் துறந்து வந்துள்ள
டாக்டர் நாகேஷ்குமாருக்கு
வாக்களியுங்கள்,”
என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
----------------------------------.