திமுக கட்சி
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டோடு உள்ளது.
எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்
எங்களுக்கு பதவி முக்கியமல்ல.
எங்கு பார்த்தாலும் மக்கள்
எழுச்சியாக இருக்கிறார்கள்
திராவிட நாயகன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தலைமையில் தான்
மீண்டும் ஆட்சி அமையும்.------
திக தலைவர்
கி.வீரமணி
பரப்புரை.
ஒசூர், ஏப்.15:
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்களை ஆதரித்து
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில்
திராவிடர் கழகம் சார்பில் நடந்த
தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
திக தலைவர் கி. வீரமணி
அவர்கள் கலந்து கொண்டு
திமுக வேட்பாளருக்கு
உதயசூரியன் சின்னத்தில்
வாக்களிக்க கோரி பொதுமக்களிடம்
வாக்கு சேகரித்தார்.
இக்கூட்டத்திற்கு
திக மாவட்ட தலைவர்
வனவேந்தன்
தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர்
செல்வம்
அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில்
திராவிடர் கழகம்
தலைவர் கி. வீரமணி
சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த கூட்டத்தில்
திமுக வேட்பாளர்
மேயர் S.A.சத்யா,
மேற்கு மாவட்ட செயலாளர்
Y. பிரகாஷ்.MLA.
தொகுதி பொறுப்பாளர்
பார். இளங்கோவன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
உதயசூரியன் சின்னத்தில்
வாக்களிக்க கோரி
பரப்புரை மேற்கொண்டனர்.
திக தலைவர் கி. வீரமணி
அவர்கள் ஒசூர் தொகுதி
திமுக வேட்பாளரை ஆதரித்து
பேசியதாவது,
திராவிட நாயகன்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலினுடைய தலைமையில் தான்
மீண்டும் ஆட்சி அமையும்.
இந்த பிரச்சாரத்தை நாங்கள்
திருநெல்வேலியில் இருந்து தொடங்கி
கடந்த பல நாட்களாக தொடர்ந்து
பிரச்சாரம் செய்து,
நேற்று தர்மபுரி மாவட்டத்திலே
முதல் கூட்டம் நடைபெற்றது.
எங்கு பார்த்தாலும் மக்கள் எழுச்சியாக இருக்கிறார்கள்.
திராவிட நாயகன்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலினுடைய தலைமையில் தான்
மீண்டும் ஆட்சி அமையும்.
சென்ற இடமெல்லாம் மக்கள்
தெளிவாக இருக்கின்றனர்.
திமுக ஆட்சி அமைய மக்கள்
தயாராகி விட்டார்கள்.
அத்துனை கட்சிகளும் இன்றைக்கு
இந்த அணி வர வேண்டுமென்று
சொல்லக்கூடிய வாய்ப்பு
பெற்றிருக்கிறார்கள் என்று
சொல்லும்போது
வெற்றி நிச்சயம் என்பது மட்டுமல்ல
உறுதி செய்யப்பட்ட ஒரு நிலை ஆகும்.
லட்சியப்போர் கொள்கை உள்ளவர்கள்
ஒரு அணி
அதுதான் இந்த அணி.
எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்
எங்களுக்கு பதவி முக்கியமல்ல.
இது கொள்கை கூட்டணியாக உள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையிலான
மதச் சார்பற்ற
முற்போக்கு கூட்டணி தெளிவாக உள்ளது.
மேலும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
பல தொலைநோக்கு திட்டங்களை
சட்டமன்ற உகறுப்பினர் பிரகாஷ்
செய்துள்ளார்.
அவர் இன்று என்னோடு புன்னகையோடு
நின்று வாக்கு கேட்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்களின்
குடும்பங்கள் செழிக்க
செய்யும் திட்டங்கள்
இல்லத்தரசி கூப்பன்
ரூ எட்டாயிரம்.
ரூ 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு.
முதியோர் மற்றும்
கைம்பெண் ஓய்வூதியம்.
1000 மகளிர் உரிமைத் தொகை.
இனி ரூ 2000.
விடியல் பயணம்
என்றென்றும் தொடரும்.
காலை உணவு திட்டம்
இனி எட்டாம் வகுப்பு வரை.
அடுத்தது பத்தாம் வகுப்பு வரை
கூட தரலாம்.
புதுமைப்பெண் திட்டம்.
தமிழ் புதல்வன் திட்டம்.
இனி மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படும்.
நான் முதல்வன்
மாதம் ரூ.1,500 உதவித்தொகை
என்று பல திட்டங்களை
முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
“சொல்வதையும் செய்வார்
சொல்லாததையும் செய்வார்”
தமிழக முதல்வர்.
இந்த இயக்கம்
திராவிட முன்னேற்ற கழக இயக்கம்
தந்தை பெரியாரின் வழிகாட்டுதலோடு இயங்குகிறது.
என்று அண்ணா கூறினார்.
கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாட்டோடு உள்ளது.
வரும் ஏப். 23ஆம் தேதி தேர்தல் நாள் ஆகும்.
அன்று மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணியின்
வேட்பாளர் சத்யா பெயரும்,
உதய சூரியன் சின்னமும்
ஒரே நேர்கோட்டில் இருக்கும்.
வாக்குச்சாவடிக்கு சென்று
உதயசூரியன் சின்னத்தில்
வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு
திக தலைவர்
கி.வீரமணி
அவர்கள் கூறி அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே
வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
உரையாற்றி அனைவரிடமும்
வாக்கு சேகரித்தார்
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
திமுக அவை தலைவர்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
எல்லோரா மணி,செந்தில்குமார்,
மாவட்ட செயலாளர் சின்னசாமி,
காங்கிரஸ் கட்சி நீலகண்டன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி
உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்
பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
-----------------------------------------.