கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
100 சதவிகிதம் வாக்குப்பதிவு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்களின் உத்தரவின்படி,
54-வேப்பனஹள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஒன்றியம்,
சென்னப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள
பேபி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும்
பணியாளர்களின்
100 சதவிகிதம் வாக்குப்பதிவு
குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி.கலா
அவர்கள்
தலைமையில் இன்று (26.03.2026)
நடைபெற்றது.
கிருஷ்ணகிரி.ஏப்ரல். 08. -
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்-2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில்,
கையெழுத்து இயக்கம்,
உறுதிமொழி,
விழிப்புணர்வு பேரணி,
ஒட்டுவில்லைகள்,
எல்.இ.டி. வாகனம் மூலம்
வாக்களிப்பதன் அவசியம் குறித்த
குறும்படங்கள் ஒளிபரப்பு,
இருசக்கர வாகன பேரணி,
கோலப்போட்டி,
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டிகள்,
செல்பி பாயிண்ட்,
விழிப்புணர்வு முத்திரை,
சிறுதானிய விதைகள் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகம்,
விவசாயிகள் கலந்து கொண்ட
டிராக்டர், மாட்டுவண்டிகள் மற்றும்
இருசக்கர வாகனங்களின்
பிரச்சார பேரணிகள்,
சிலம்பாட்டம்
உள்ளிட்ட பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
மெழுகுவர்த்தி மூலம்
100% - வாக்கு - வாசகம்
விழிப்புணர்வு
அதனைத்தொடர்ந்து,
2026- ஏப்ரல் - 08-ம் தேதியன்று
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026- ல்
வாக்காளர்கள்
100% வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
54-வேப்பனஹள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஒன்றியம்,
சென்னப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள
பேபி கார்மெண்ட்ஸ்
நிறுவனத்தில்
பணிபுரியும் 500 பணியாளர்கள்
மெழுகுவர்த்தி மூலம்
"100% வாக்கு" என்ற வாசகமும்,
உறுதிமொழி எடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி.கலா,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.வரதராஜன்,
வட்டார ஒருங்கிணைப்பாளர்
திருமதி.அருள்மொழி,
ஊராட்சி செயலர்
திரு.சரவணன்,
மற்றும்
மண்டல துணை வட்டார
வளர்ச்சி அலுவலர்,
கம்பெனி பிரதிநிதிகள்
கலந்துகொண்டனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
-----------------------------------.