தமிழகத்தில் ஊழல் ஆட்சி திமுகவை
தூக்கி எறிந்துவிட்டு
ஊழலற்ற அதிமுக ஆட்சியை
கொண்டு வர வேண்டும்.
தளி தொகுதியில்
மத்திய அமைச்சர் நட்டா
பரப்புரை
ஓசூர்.ஏப். 15. –
தேன்கனிக்கோட்டையில் நடந்த பாஜக தேர்தல் பொது கூட்டத்தில் தமிழகத்தில் ஊழலற்ற அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் நட்டா வலியுறுத்தி பேசினார்.
தளி சட்டபேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாகேஷ்குமாரை ஆதரித்து தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சார பொதுகூட்டம் நடைப்பெற்றது.
தலைமை
இந்த பொது கூட்டத்தில்
பாஜக மேற்கு மாவட்ட தலைவர்
வி. நாராயணன்.
தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில்
மத்திய சுகாதார துறை அமைச்சர்
ஜே.பி. நட்டா
அவர்கள் கலந்துகொண்டு
சிறப்புரை ஆற்றினார்.
அப்போது கூடியிருந்த பொதுமக்களிடம்
தாமரை சின்னத்திற்கு
வாக்களிக்குபடி பிரச்சாரம் செய்தார்.
மத்திய அமைச்சர் நட்டா பேசும்போது,
தமிழகத்தில் ஊழல் ஆட்சி திமுகவை
தூக்கி எறிந்துவிட்டு
ஊழலற்ற அதிமுக ஆட்சியை
கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் திமுக என்று சொன்னால்
குடும்ப ஆட்சி,
பணத்தை கொள்ளையடிப்பது,
முதலமைச்சர் ஸ்டாலின்,
துணை முதல்வர் உதயநிதி,
கனிமொழி எம்பி.
இவர்கள் கமிஷன் அடிப்பதை கொள்கையாக உள்ளனர்.
தமிழகத்தில் இளைஞர்களை போதையில் தள்ளிகொண்டுள்ளனர்.
இதனால் 51 சதவீதம் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
மேலும் தமிழகத்தில்
பெண் குழந்தைகளுக்கு எதிரான
பாலியல் குற்றங்கள்
அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்திற்கு பெயர் போன தமிழகம்
தற்போது ஜனநாயகம் எங்கே என
கேள்வி எழுப்பும் நிலை உள்ளது.
தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான
திமுக ஆட்சி நடைபெறுகிறது.
உதயநிதி சனாதனதர்மத்திற்கு எதிராக பேசுகிறார்.
அ. ராஜாவும் சனாதனத்தை
குஷ்டம் என கூறினார்.
எனவே இந்துக்களுக்கு எதிரான திமுக
ஆட்சியை அகற்ற வேண்டும்.
திமுக 2021 ஆம் ஆண்டு
தேர்தல் வாக்குறுதியில்
சமையல் எரிவாயு ரூ. 100 மானியம்
வழங்கப்படும்.
பெட்ரோலுக்கு ரூ.50 குறைக்கப்படும்
என கூறினார்கள்.
அதேபோல் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை எனக்கூறினர்.
ஆனால் சொன்னதையும் செய்யவில்லை சொல்லாதையும் செய்யவில்லை.
பிரதமர் மோடி
2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மோசமான பொருளாதாரம் இருந்தது.
ஆனால் தற்போது உலகத்திலேயே
2-ம் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவிலேயே
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்திற்கு மத்திய அரசு
எந்த திட்டமும்செய்ய வில்லை என
ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் மத்திய அரசு ரூ 14 லட்சம் கோடி
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது போன்று பல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே இருப்பு பாதை மற்றும் ராமேஸ்வரம் பாம்பன் மேம்பாலம்,
98 சதவீதம் மின்சார ரயில்கள் அமைத்துகொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் 9 வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வந்துள்ளார்.
77 ரயில் நிலைம் புதுபிக்கப்பட்டுள்ளது.
2500 கோடியில் தொழிற்வளர்ச்சி
செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது.
சேலம், திருச்சி, தூத்துக்குடி,
கோவை, சென்னை, மதுரை,
ஆகிய விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்வதற்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு திட்டங்களை
மத்திய அரசால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லுகிறார்.
தளியில் உள்ள மற்றோரு வேட்பாளர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளது.
எனவே உங்கள் வேட்பாளர் குற்றவாளியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு மருத்துவரை சட்டசபைக்கு அனுப்புகிறீர்களா என
மத்திய அமைச்சர் நட்டா
பரப்புரையில் பேசினார்.
கர்நாடகா மாநில
எதிர்க்கட்சித் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான
அசோக் குமார்
பேசும்போது கூறியதாவது,
மக்களுக்காக உங்களுடன்
பணியாற்றும் மருத்துவரை
சட்டசபைக்கு அதிகமான ஓட்டு
வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்து
அனுப்புங்கள் என்று கூறினார் .
ஏனென்றால் கர்நாடகாவில்
அடுத்து வருகின்ற
சட்டமன்ற தேர்தலில்
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி
அமோக வெற்றி பெறும்.
அதே போல் கர்நாடகாவில்
இருந்து தளி தொகுதிக்கு
பல தொடர்புகள் இருக்கிறது.
கர்நாடகா போக்குவரத்து
அதிகமாக உள்ளது.
கர்நாடகா மக்கள் தளி பகுதியில் இருக்கின்றார்கள்.
தளிப்பகுதி மக்கள் கர்நாடகாவில்
பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் எல்லாம்
ஒற்றுமையாக உள்ளார்கள்.
ஆகையால் வருகின்ற
சட்டமன்றத் தேர்தலில்
தளிதொகுதியில்
பிஜேபி வெற்றி பெற்றால்
வரும் காலத்தில் கர்நாடகாவும்
இந்த தளி தொகுதிக்கு
மலை கிராமங்களுக்கு
போக்குவரத்து வசதி
விவசாயத்துக்கு தண்ணீர் வசதிகளை
செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில்
முன்னாள் மாநில துணை தலைவர்.
கே எஸ் நரேந்திரன்
சி. நரசிம்மன். Ex.MP
கே.பி.ராமலிங்கம் Ex MP.
பொம்மனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்
சதீஷ் ரெட்டி
அ.திமுக தொகுதி பொறுப்பாளர்
நாகேஷ்.
PMK. மாவட்டத் தலைவர்
சீனிவாஸ்
.
அம்மா முன்னேற்ற கழக செயலாளர்
மாரைகோடு.
தமிழ் மாநில காங்கிரஸ்
மாவட்ட தலைவர்
ரமேஷ் ரெட்டி.
பிஜேபி மாவட்ட துணை தலைவர்
பாஸ்கர் ரெட்டி.
ஒன்றிய தலைவர்கள்
ராஜேஷ் குமார்
சிவக்குமார்
மார்க்கண்டேஸ்வரர் ராவ்.
கிருஷ்ணன்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்
பாலகிருஷ்ணா.
நகரத் தலைவர்
சீனிவாஸ் பிஜபி.
மற்றும் கூட்டணி கட்சி மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைவர்கள். தாய்மார்கள் தொண்டர்கள் என்று அலை கடலென பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
----------------------------------------.