கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
எஸ்எஸ்எல்சி பொது தேர்வு முடிவுகள்
மாவட்ட அளவிலான
அரசு பள்ளிகளில்
கெலமங்கலம் அரசு மகளிர்
உயர்நிலைப்பள்ளி
முதலிடம் பெற்று சாதனை!
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த
மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பை
வழங்கி பாராட்டு
தேன்கனிக்கோட்டை. மே. 21. -
கெலமங்கலம் அரசு மகளிர்
உயர்நிலைப்பள்ளி
மாணவிகள் சாதனை
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் அரசு மகளிர்
உயர்நிலைப்பள்ளியில் பயிலும்
மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வில்
மாவட்ட அளவில்
அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்று
சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு
பள்ளிக்கல்வித் துறை
மூலமாக நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு
அரசு பொதுத் தேர்வு முடிவுகள்
20.05.2026 அன்று வெளியிடப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் அரசு மகளிர்
உயர்நிலைப் பள்ளி மாணவிகள்
மாவட்ட அளவில் மிகச்சிறந்த
மதிப்பெண்களைப் பெற்று
பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவிகள் பெற்ற மதிப்பெண் விவரங்கள்:
முதலிடம்
கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த
மாணவி சுமா.
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்து
சாதனை புரிந்துள்ளார்.
இரண்டாம் இடம்
இதே பள்ளியைச் சேர்ந்த
மாணவி கீர்த்தனா.
500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று,
மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து
சாதனை புரிந்துள்ளார்.
மூன்றாமிடம்
மாணவி மகாலட்சுமி.
500 க்கு 484 மதிப்பெண்கள் பெற்று,
பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
2025-26 கல்வியாண்டு, இப்பள்ளியில்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய
159 மாணவிகளில் 147 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளியின் மொத்த தேர்ச்சி விழுக்காடு
95% ஆக உள்ளது.
475 மதிப்பெண்களுக்கு மேல்
7 மாணவிகள் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
400 மதிப்பெண்களுக்கு மேல்
45 பேர் எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அரசுப்பள்ளிகளில்
முதலிடம் பிடித்து
சாதனை படைத்த மாணவிகளை,
பள்ளியின் பொறுப்பு
தலைமை ஆசிரியர் திம்மப்பா.
மற்றும் இருபால் ஆசிரியர்கள்,
மாணவிகள், பள்ளி மேலாண்மைக்
குழு உறுப்பினர்கள்
ஆகியோர் இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்
தெரிவித்துக் கொண்டனர்.
---------------------------------------.