ஒசூர் சட்டமன்ற தொகுதி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
திமுக கட்சியின்
வேட்பாளர் S.A. சத்யா
கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன்
ஊர்வலமாக சென்று
ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில்
வேட்புமனு தாக்கல்.
தமிழகத்தில் உள்ள தேர்தல்
அறிக்கைகளிலேயே
திமுகவின் தேர்தல் அறிக்கை தான்
நம்பர் ஒன்று.
திமுகவின் நலத்திட்டங்களே
வெற்றி தரும்.
ஒசூர் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் ---
திமுக வேட்பாளர்.
S.A. சத்யா உறுதி.
ஒசூர். ஏப்ரல். 04. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
போட்டியிடும்
திமுக வேட்பாளர்
திரு. S.A. சத்யா
இன்று(04.04.2026) திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக
உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரோடு
ஊர்வலமாக சென்று
ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
அவர்களிடம்
வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது திமுக கட்சியின்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
திரு. ஒய்.பிரகாஷ்
ஒசூர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்
திரு. பார். இளங்கோவன்,
திமுக மேற்கு மாவட்ட அமைப்பாளர்
திரு. யுவராஜ்
மற்றும் பலர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்
திமுக வேட்பாளர் S.A.சத்யா கூறியதாவது,
மாண்புமிகு முதலமைச்சர், எங்களுடைய இயக்கத்தின் தலைவர் அவர்களின் ஆசியோடு ஒசூர் சட்டமன்ற தொகுதிக்கு
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
சார்பாகவும் இன்றைக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.
மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் எப்படி தமிழகத்தில் மீண்டும் 2-வது முறையாக அவர் முதலமைச்சராக பொறுப்யேற்கிறாரோ அதேபோல
ஒசூரிலும் திமுக 3-வது முறையாக
வெற்றி பெறும் என்பதில்
எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
அதேபோல எங்களுக்கு உறுதுணையாக எங்களுடைய மாவட்ட செயலாளரும்,
சட்டமன்ற உறுப்பினரும் இருக்கிறார்கள்.
திமுகவின் கடைகோடி தொண்டர்கள் வரை உழைக்க தயாராக இருக்கிறார்கள்.
அதேபோல எங்களுடைய
மதசார்பற்ற முற்போக்கு
கூட்டணியினுடைய தலைவர்கள்,
நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்
ஒசூர் சட்டமன்ற தொகுதியின் பொதுமக்கள் அனைவரும் திமுகவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள்.
ஒசூர் தொகுதி பொறுப்பாளராக அண்ணன்
பார் இளங்கோ அவர்களை எங்களுடைய தலைவர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் பங்கேற்று பணியாற்றிய அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியவர்.
அவரும் எங்களோடு இணைந்து இந்த தேர்தல் களத்தில் இருக்கிறார்.
ஆகவே திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது.
இதைநான் உறுதியோடு
சொல்லிக்கொள்கிறேன்.
காரணம்
இந்த சட்டமன்ற தொகுதியை
பொறுத்த வரை
நம்முடைய சட்டமன்ற உறுப்பினரும் சரி, முதலமைச்சரும் சரி
பல்வேறு நலத் திட்டங்களை
இந்த தொகுதிக்கு செய்துள்ளனர்.
இந்த நலத்திட்டங்கள் மட்டுமல்ல
திமுகவின் தேர்தல் அறிக்கையும்
தமிழகத்தில் உள்ள
தேர்தல் அறிக்கைகளிலேயே
நம்பர் ஒன்றாக இருக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையை
யாராலும் வீழ்த்த முடியாது .
இவ்வாறு அவர் கூறினார்.
--------------------------------------------.