ஒசூர் மாநகராட்சியில்
உயர்மட்ட மேம்பாலம்
ரயில்வே மேம்பாலம்
அமைக்கும் பணிகள்
கலெக்டர் ஆய்வு
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில்
நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம்,
ரயில்வே மேம்பாலம்
அமைக்கும் பணிகள் மற்றும்
சார்பதிவாளர் அலுவலக இடமாற்ற பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் ஆய்வு
ஒசூர். மே. 20. –
பத்தலப்பள்ளி சாலை வழியாக
செல்லும் பொதுமக்கள்,
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,
வாகன ஓட்டிகள்
சிரமமின்றி எளிதாக சென்று வர ஏதுவாக, உயர்மட்ட மேம்பால பணியை
தரமாகவும், விரைவாகவும் முடித்து
பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
நெடுஞ்சாலைத்துறை
பொறியாளர்களுக்கு அறிவுரை.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட்
அருகில் நடைபெற்று வரும்
உயர்மட்ட மேம்பால பணிகள்,
மகாத்மா காந்தி சாலை
அருகில் செயல்பட்டு வரும்
சார்பதிவாளர் அலுவலகம், கொத்தகொண்டப்பள்ளி
ரயில்வே மேம்பாலம்
அகலப்படுத்தும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
இன்று (20.05.2026) நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
ஓசூர் பத்தலப்பள்ளி
மார்க்கெட் அருகில் நடைபெற்று வரும்
உயர்மட்ட மேம்பால பணிகள்,
சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள்,
பொதுமக்களுக்கு
போக்குவரத்து நெரிசல் இல்லாமல்
சாலை வசதி ஏற்படுத்துவது குறித்தும்,
கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்து
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், போக்குவரத்து நெரிசலை
குறைக்கும் வகையில்,
மேம்பாலம் நடைபெறும்
தேசிய நெடுஞ்சாலை முதல்
ராயக்கோட்டை சாலை
இணைக்கும் வகையில்
ரூ.49 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில்,
தேசிய நெடுஞ்சாலை முதல்
கசவுகுட்டா வரை
சுமார் 620 மீட்டர் தூரத்திற்கு
புதிய தார்சாலையும்,
மேலும் கசவுகுட்டா முதல் எம்சிசி வரை
350 மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலைகள் வழியாக பத்தலப்பள்ளி
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து,
ராயக்கோட்டை சாலை
சென்னத்தூர் அருகே
தேசிய நெடுஞ்சாலை,
சுற்றுவட்ட சாலை மூலம்
பெங்களூர் செல்லும் வகையில்
இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
உயர்மட்ட மேம்பால பணிகளை
துரிதமாக முடிக்க
தேசிய நெடுஞ்சாலை
பொறியாளர்களுக்கு
அறிவுறுத்தினார்.
தொடர்ந்து,
ஓசூர் மாநகராட்சி,
மகாத்மா காந்தி சாலையில்
இயங்கி வரும்
சார்பதிவாளர் அலுவலகத்தை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
இந்த அலுவலகத்தில் நாள்தோறும்
70 -க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெறுகிறது.
மேலும், இந்த அலுவலகம்
செயல்பட்டு வரும் இப்பகுதியில்
தற்போது மிகுந்த போக்குவரத்து
நெரிசல் உள்ளதால்,
பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே இப்பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு
பொதுமக்கள் சிரமமின்றி எளிதாக
வந்து செல்ல ஏதுவாக,
மாற்று இடத்திற்கு மாற்றுவது குறித்து
நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
நஞ்சாபுரம் பகுதியில்
இந்திய ரயில்வே துறை சார்பாக,
இரண்டு வழி ரயில் பாதை
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ரயில்பாதை அமைக்கும் இடத்தில்
நெடுஞ்சாலைத்துறை சார்பாக,
அத்திப்பள்ளி முதல்
ஒசூர் மாநகராட்சியை
இணைக்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிசாலையில்,
ரயில் பாதையை கடக்கும் விதமாக
நான்கு வழி சாலை மேம்பாலம்
அமைப்பதற்கான பணிகளை
பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட பதிவாளர்
திரு.மீரமுகதீன்,
தேசிய நெடுஞ்சாலைத்துறை
திட்ட அலுவலர்
திரு.ரமேஷ்,
நெடுஞ்சாலைத்துறை
கோட்டப்பொறியாளர்
(கட்டடம் (ம) பராமரிப்பு)
திரு.திருலோகசுந்தர்,
உதவி கோட்டப்பொறியாளர்
திரு.முருகன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.விஜயா,
திரு.வெங்கடேசன்,
திரு.சிராஜூதின்,
வட்டாட்சியர்
திரு.ஜெகதீஷ் குமார்,
சார் பதிவாளர்
திரு.அரவிந்த்ராஜ்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
---------------------------------------------.