தளி சட்டமன்ற தொகுதி
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026
56- தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள்
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில்
முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக பூட்டி
சீல் வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி. மே. 05. -
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் - 2026
56 - தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள்,
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு
கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்
கல்லூரியில்
இருந்து கொண்டு வரப்பட்டு
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
அலுவலகத்தில் உள்ள
பாதுகாப்பு அறையில்
முகவர்கள் மற்றும்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் -
வட்டாட்சியர்
முன்னிலையில்
05.05.2026 காலை 11.00-மணிக்கு
பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.
-------------------------------------.