உணவு பாதுகாப்புத்துறை
தரமற்ற கலப்பட உணவுகள்
குறித்து பொதுமக்கள்
TN Food Safety Consumer App,
இணையவழி மற்றும்
Whastapp செயலி எண் – 9444042322.
மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 6. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
உணவு பாதுகாப்பு துறை சார்பாக,
மாவட்ட அளவிலான
வழிகாட்டுதல் குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
05.06.2026 அன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக,
மாவட்ட அளவிலான வழிகாட்டுதல்
குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
உணவு பொருள்கள்
மற்றும்
எண்ணெய் பலகாரங்களில்
செயற்கை வண்ணங்கள்
(Artificial colour)
பயன்படுத்த கூடாது
எனவும்,
பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள
கடைகள் மற்றும் ஓட்டல்களிலும்,
திருவிழாக்களில் அமைக்கப்படும்
தற்காலிக கடைகளிலும்
காலவதியான பொருள்களை
ஆய்வு மேற்கொள்ளவும்,
உணவு சமைக்க பயன்படுத்தும்
எண்ணெய்களை சுத்தமாகவும் மற்றும்
மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது
எனவும்
KRP Dam சுற்றியுள்ள
மீன் வறுவல் கடைகளில்
பழைய மீன்களை பயன்படுத்த கூடாது
எனவும்,
பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு
அபாரதம் விதித்தல் தொடர்பாகவும்,
அனைத்து உணவு வணிகர்களும்
உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும்
பதிவு சான்றிதழ் பெற்றிருப்பது
குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும்
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து
பொதுமக்கள்
TN Food Safety Consumer App,
இணையவழி மற்றும்
Whatsapp செயலி எண்.9444042322
மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ்
இ.ஆ.ப.,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர்
திரு.நடராஜன்,
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்
மரு.செந்தில் குமார்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
நுகர்வோர் பாதுகாப்பு சங்க
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.