சென்னை முதன்மை ஆணையர்,
சுங்கம் (பொது) அலுவலகத்தில்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
தகுதியான
முன்னாள் படைவீரர்கள்
30.04.2026-க்குள்
இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 28. –
முன்னாள் படைவீரர்களுக்கு
வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள முதன்மை ஆணையர்,
சுங்கம் (பொது) அலுவலகத்தில்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான
முன்னாள் படைவீரர்கள் 30.04.2026-க்குள்
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையில் உள்ள முதன்மை ஆணையர்,
சுங்கம் (பொது) அலுவலகத்தில்
கீழ்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்கள்
முன்னாள் படைவீரர்களுக்கு
இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே படைப்பிரிவிலிருந்து
ஓய்வு பெற்ற தகுதி வாய்ந்த
முன்னாள் படைவீரர்கள்
https:chennaicustoms.gov.in
இணையதளம் மூலம்
30.04.2026 க்குள்
விண்ணப்பிக்கலாம்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்
சேர்ந்த தகுதியான முன்னாள் படைவீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி
பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------.