தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
அடர் வனப்பகுதியான
கடமகுட்டை கிராம வாக்குச்சாவடி மையத்தில்,
118 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள் 17.04.2026 அன்று
6.5 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று
பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஏப். 17. -
அடர் வனப்பகுதி கிராமம்
வாக்குச்சாவடி
6.5 கி.மீட்டர் நடந்து சென்று
ஆட்சித்தலைவர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
கடைக்கோடி மலை கிராமமான,
பெட்டமுகிலாலம் ஊராட்சி,
அடர்வனபகுதியில் அமைந்துள்ள
கடமகுட்டை கிராமத்தில் உள்ள
வாக்குச்சாவடி மையத்தில்
அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள்
இன்று (17.04.2026) 6.5 கி.மீட்டர் தூரம்
நடந்து சென்று நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு
குறித்து மலைகிராம மக்களுக்கு
வாக்காளர் விழிப்புணர்வு
டி.சர்ட், தொப்பிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வழங்கினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தாவது:
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள
2,093 வாக்கு சாவடி மையங்களில்,
வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி
வாக்களிக்க ஏதுவாக
குடிநீர் வசதி,
கழிப்பறை வசதிகள்,
மின்சார வசதிகள்,
மாற்றுத்திறனாளிகள்
வாக்குப்பதிவு மையத்திற்கு
செல்லும் வகையில் சக்கர நாற்காலி,
சாய்வு தளம்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல,
தளி,
வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட
மலைகிராமங்களில் உள்ள
வாக்காளர்கள் வாக்குப்பதிவு
மையங்களுக்கு வருகை புரிந்து
வாக்களிக்க
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
இன்று தளி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மலைகிராமமான
பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட
அடர் வனபகுதியில் அமைந்துள்ள
கடமகுட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு
வரும் வாக்கு சாவடி மையத்தை
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கடமகுட்டை வாக்குச்சாவடி மையம்
பெட்டமுகிலாளம் கிராமத்திலிருந்து
சுமார் 45 கி.மீட்டர் தூரத்திலும்,
தருமபுரி மாவட்டம்,
அத்திமுட்லு கிராமத்திலிருந்து
சுமார் 6 கி.மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேலும் இக்கிராமம் அடர் வனபகுதியில் அமைந்துள்ளதால் எவ்வித போக்குவரத்து
வசதியும் கிடையாது.
கடமகுட்டை கிராமத்தில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 118 வாக்காளர்கள்
வாக்களிக்க வசதியாக,
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மலைகிராம வாக்குச்சாவடி
மையத்திற்கு தேவையான
அடிப்படை வசதிகள் குறித்து
நேரில் பார்வையிட
சுமார் 6.50 கி.மீட்டர் தூரத்திற்கு
வனபகுதியில் நடந்து சென்று நேரில் பார்வையிடப்பட்டது.
இப்பள்ளி வளாகத்தில் புதியதாக
2 சின்டெக்ஸ் டேங்க்,
புதிய பைப்லைன் அமைத்து
தண்ணீர் வசதி,
கழிப்பறை வசதிகள்,
குடிநீர் வசதிகள்
மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100% வாக்களிப்பு
விழிப்புணர்வு
மேலும் இக்கிராமத்தில் உள்ள
118 வாக்காளர்கள் அனைவரும்
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு
துண்டு பிரசுரங்கள்,
டி.சர்ட்டுகள்
வழங்கி விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது,
மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ரமேஷ் குமார்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.முருகன்,
வட்டார மருத்துவ அலுவலர்
திரு.ராஜேஷ்,
மண்டல அலுவலர்
திரு.தேசிங்கு
மற்றும் வருவாய்த்துறை,
ஊரக வளர்ச்சித்துறை,
வனத்துறை, காவல் துறை
அலுவலர்கள் உடன் இருந்தனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழகத்தின் பெருவிழா"
--------------------------------------.