தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு
வாரியம் ஓசூர் சார்பாக,
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026
கிருஷ்ணகிரி மாவட்டம்
திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி. ஜுன். 03. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஓசூர் சார்பாக,
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026
(Solid Waste Management Rules, 2026)
தொடர்பான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தலைமையில்
இன்று (03.06.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்ததாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026
(Solid Waste Management Rules, 2026)
தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
01.04.2026 முதல்
நடைமுறைக்கு வந்துள்ள
திடக்கழிவு மேலாண்மை விதிகள். 2026
குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இவ்விதிகள், முந்தைய திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ மாற்றி அமலுக்கு வந்துள்ளதுடன். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும்,
இந்திய உச்சநீதிமன்றத்தின்
19.02.2026, 29.04.2026 மற்றும்
05.05.2026 ஆகிய தேதியிட்ட
உத்தரவுகளின் அடிப்படையில்,
திடக்கழிவு மேலாண்மை விதிகளை
நாடு முழுவதும் திறம்பட செயல்படுத்த
பல்நிலை நிர்வாக அமைப்பு
(Multi-Level Governance Structure)
உருவாக்கப்பட்டுள்ளது என
விளக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு) சட்டம்,
1986-ன் பிரிவு 5-ன் கீழ்
வழங்கப்பட்ட அதிகாரங்கள்.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026ஐ செயல்படுத்தும் நோக்கில்
மாவட்ட ஆட்சியர்களுக்கு
ஒரு ஆண்டு காலத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் திடக்கழிவு மேலாண்மை
பணிகளை மேற்பார்வையிடுதல்,
சிறப்பு கண்காணிப்பு பிரிவு (Special Cell) அமைத்தல்,
உள்ளாட்சி அமைப்புகளின்
செயல்திறனை காலமுறைப்படி
ஆய்வு செய்தல்
மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்கள், நிறுவனங்கள் மற்றும்
அமைப்புகளுக்கு கட்டாய வழிகாட்டுதல்கள்
வழங்குதல் போன்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
மேலும்,
வீடுகள்,
வணிக நிறுவனங்கள்,
கல்வி நிறுவனங்கள்
மற்றும்
அபாயமற்ற தொழிற்சாலை கழிவுகள்
ஆகியவை திடக்கழிவின் வரையறைக்குள் அடங்கும் என்றும்,
அபாயகர கழிவுகள்,
உயிரி மருத்துவக் கழிவுகள்,
மின்னணு கழிவுகள்,
பேட்டரி கழிவுகள்
கதிரியக்க கழிவுகள்
இவ்விதிகளின் வரம்பிற்கு
வெளியே உள்ளன என்றும்
விளக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும்,
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக கடைபிடித்து,
தூய்மையான மற்றும் நிலையான
சுற்றுச்சூழலை உருவாக்க
தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப.
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு
வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்
திரு.செ.முத்துராஜ்,
உதவி செயற்பொறியாளர்
திரு. செந்தில் குமார்.
ஒசூர் மாநகர நல அலுவலர்
மரு.அஜிதா,
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலர்,
பேரூராட்சி அலுவலர்கள்
திரு.குமார்.
திரு.பெருமாள்,
திருமதி.ராணி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
--------------------------------------------.