தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக
ஓசூர் கிளை அலுவலகத்தில்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான
சிறப்பு தொழில் கடன் விழா
30.06.2026 வரை நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 4. –
T I I C - ஒசூர் கிளையில்
சிறப்பு தொழில்
கடன் விழா
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக
ஓசூர் கிளை அலுவலகத்தில்
குறு, சிறு மற்றும் நடுத்தர
தொழில்களுக்கான
சிறப்பு தொழில் கடன் விழா
30.06.2026 வரை நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
மாநில அளவில் செயல்பட்டு வரும்
தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும்.
1949-ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம்
மாநில அரசின் ஆதரவுடன்
இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு
கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு
முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர
தொழில் பிரிவுகளுக்கு
புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும்
ஏற்கனவே இயங்கிகொண்டிருக்கும்
தொழிற்சாலைகளை
விரிவுபடுத்துவதற்கும்.
உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும்
பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ்
கடனுதவி வழங்கி வருகிறது.
சிறப்பு தொழில் கடன் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் கிளை அலுவலகத்தில் (முகவரி):
பிளாட் எண்.308,
309 சிப்காட் தொழில் வணிக வளாகம்,
லால் கம்பெனி எதிரில்,
பாரத வங்கி அருகில்,
ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டை,
ஓசூர் - 635 126.
குறு, சிறு மற்றும் நடுத்தர
தொழில்களுக்கான
சிறப்பு தொழில் கடன் விழா
30.06.2026 வரை
நடைபெற உள்ளது.
இச்சிறப்பு தொழில் கடன் முகாமில்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செயல்படுத்திவரும்
பல்வேறு கடன் வசதி திட்டங்கள்.
தமிழ்நாடு அரசு வழங்கி வரும் மானியங்கள்
புதிய தொழில் முனையோர் மற்றும்
தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS),
அண்ணல் அம்பேத்கர் தொழில்
முன்னோடிகள் திட்டம் (AABCS)
மற்றும்
கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம்
(Kalaingar Green Energy Scheme)
போன்ற சிறப்பு திட்டங்கள் குறித்து
விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றது.
தகுதி வாய்ந்த தொழில்களுக்கு
தமிழ்நாடு அரசின்
25% முதலீட்டு மானியமாக
ரூ.150 இலட்சம் வரை
வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்
ஏற்கனவே இயங்கி வரும்
நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை
மேம்படுத்தும் பொருட்டு
விரிவாக்கம் செய்ய,
நவீன இயந்திரங்கள்
நிறுவும் பட்சத்தில்
கூடுதலாக 5% வட்டி மானியமும்
வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கும்
கடன் விண்ணப்பங்களுக்கு
ஆய்வு கட்டணத்தில் இருந்து
முழு விலக்கு அளிக்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை
புதிய தொழில் முனைவோர் /
தொழிலதிபர்கள்
பயன்படுத்தி
தொழில் திட்டங்களுடன்
வருகை தந்து
தொழில் கடன் மற்றும்
மத்திய, மாநில அரசுகளின்
மானிய சேவைகளை
பயன்படுத்திக் கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு
9444396853 / 8870577147.
எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்.
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------.