கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சியில்
உலக சுற்றுச் சூழல் தினம்
ஒசூர் மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை,
ஒசூர் பப்ளிக் ஸ்கூல் இணைந்து நடத்திய
உலக சுற்றுச்சூழல் தினம்
விழிப்புணர்வு வாக்கத்தான்
மாபெரும் பசுமை நடைபயணம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க
உறுதிமொழி ஏற்பு.
ஓசூர், ஜூன். 6. -
ஒசூர் மாநகராட்சியில்
ஒசூர் மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை,
ஒசூர் பப்ளிக் ஸ்கூல்
இணைந்து நடத்திய
உலக சுற்றுச்சூழல் தினம்
விழிப்புணர்வு வாக்கத்தான்
நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க
உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஜுன் – 5-ம் தேதியன்று
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை,
ஒசூர் பப்ளிக் ஸ்கூல்
இணைந்து நடத்திய
விழிப்புணர்வு
வாக்கத்தான்
ஒசூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கியது,
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
ஒசூர் சப்கலெக்டர்
திருமதி. ஆக்ரித்தி சேத்தி IAS.
மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை
திருமதி. டாக்டர். அம்பிகாபாரி,
ஓசூர் எம்எல்ஏ
திரு. பாலகிருஷ்ணா ரெட்டி,
ஆகியோர் பங்கேற்று
சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து கொடியசைத்து விழிப்புணர்வு வாக்கத்தானை தொடங்கி வைத்தனர்.
உறுதி மொழி ஏற்பு
முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஒசூர் சப்கலெக்டர்
திருமதி. ஆக்ரித்தி சேத்தி.IAS
அவர்கள் பேசும் போது
உலகச்சுற்றுச்சூழல்
தின வாக்கத்தானில் பங்கேற்ற
மாணவர்கள்,
மற்றும் ஏற்ப்பாட்டாளர்களை
பாராட்டினார்.
பசுமை நடைபயணம்
வாக்கத்தான் பசுமை நடைபயணத்தில்
ஒசூர் பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள்,
ஆசிரியர்கள் பங்கேற்று
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட
பதாகைகளை ஏந்தியபடி, சென்றனர்.
இந்த விழிப்புணர்வு வாக்கத்தான்
காமராஜ் காலனி,
வட்டாட்சியர் அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை
வழியாக பயணித்து இறுதியில்
ஒசூர் சப்கலெக்டர் அலுவலகம்
முன்பு நிறைவுப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
மாமன்ற உறுப்பினர்கள்
திருமதி. பார்வதிநாகராஜ்.
திருமதி. இந்திராணி,
திருமதி. பாக்கியலட்சுமி,
ஒசூர் மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை சூப்பர்வைசர்
திரு. கோபாலகிருஷ்ணன்,
மற்றும் சமூக ஆர்வலர்கள்
பள்ளி மாணவ மாணவிகள்
கலந்து கொண்டனர்.
----------------------------------------------.