கிருஷ்ணகிரி மாவட்டம்
பள்ளி வாசல்களில் பணியாற்றும்
உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க
மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்
இருசக்கர வாகனம் வாங்க
30.06.2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 30. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
பள்ளி வாசல்களில் பணியாற்றும்
உலமாக்களுக்கு
இருசக்கர வாகனம் வாங்க
மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்
இருசக்கர வாகனம் வாங்க
30.06.2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்
நல வாரியத்தில் பதிவு பெற்ற
18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு
புதிய இருசக்கர வாகனம் வாங்க
மானியத் தொகை ரூ.50,000/- வழங்க
தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும்
பேஷ்இமாம்கள்,
ஆலிம்கள் அரபி ஆசிரியர்கள்/ ஆசிரியைகள்
உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இருசக்கர வாகனத்திற்கான
மானியம் பெற
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலரிடம் /
படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன்
விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே
பயனாளி இருசக்கர வாகனம்
வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகங்களில்
30.06.2026ம் தேதிக்குள்
உரிய ஆவணங்களுடன்
சமர்ப்பிக்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------.