திமுக ஆட்சி
ஒரு பொற்கால ஆட்சி.
ஒரு மகத்தான ஆட்சி,
ஏழைகளுக்கான ஆட்சி
பெண்களுக்கான ஆட்சி
ஒசூர் மக்களின் தேவைகளை
நிறைவேற்றுகின்ற ஆட்சி ----
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
பாகலூரில் பரப்புரை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பாகலூர் பகுதியில்
திமுக வேட்பாளர் மேயர் S.A. சத்யா
தீவிர வாக்கு சேகரிப்பு.
ஒசூர். ஏப். 13. –
திமுக வேட்பாளருக்கு
பாகலூரில் சிறப்பான வரவேற்பு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள்
பாகலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள
கிராமங்களில்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாகலூர் மக்கள் சார்பில்
அவருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து
பட்டாசு வெடித்து சிறப்பாக
வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகலூரில் திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள்
வாக்கு சேகரிக்கும் போது
தனது பரப்புரையில் கூறியதாவது,
முதலமைச்சரின் ஆட்சி
பொற்கால ஆட்சி
சட்டமன்ற பொதுத்தேர்தலில்
மதசார்பற்ற முற்போக்கு
கூட்டணியின் சார்பாக
மாண்புமிகு முதலமைச்சர் சார்பாக.
ஒசூர் தொகுதி மக்களின் சார்பாக
போட்டியிடுகின்ற எனக்கு
உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய
மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சி
ஒரு மகத்தான ஆட்சி,
ஒரு பொற்கால ஆட்சி.
ஏழைகளுக்கான ஆட்சி
அதிலும் குறிப்பாக
பெண்களுக்கான ஆட்சி
ஆகும்.
பெண்களுக்கான திட்டங்களை
தந்த முதலமைச்சரை
நாம் எங்கும் காண முடியாது.
வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட்
போட்டது போல
இனி பெண்களுக்காகவும்
தனியாக பட்ஜெட் போடுவார்
நமது முதலமைச்சர்.
அந்தளவுக்கு பெண்களுக்கு
பல நல்ல திட்டங்களை
தந்தவர் தான்
நம்முடைய முதலமைச்சர்
அவர்கள்.
ஓசூருக்கு ரூ.1000 கோடி திட்டம்
மாநகராட்சியில்
நாங்கள் பொறுப்பேற்ற பிறகு
ஓசூர் பகுதிக்கு ரூ1000 கோடி மதிப்பில்
திட்டங்களை கொண்டு வந்து
செயல்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்
ரூ.580 கோடி மதிப்பில்
பாதாள சாக்கடை திட்டம்
நடைபெற்று வருகிறது.
ரூ50 கோடி மதிப்பில்
புறநகர் பேருந்து நிலையம்
பணிகள் நிறைவடையும்
தருவாயில் உள்ளது.
ஒசூரில் தற்போதுள்ள
பேருந்து நிலையம் கூட
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது
நாங்கள் நகராட்சி தலைவராக
இருந்த போது கட்டப்பட்டது தான்.
ரூ.100கோடி மதிப்பில்
தலைமை மருத்துவமனை
கட்டி முடிக்கப்பட்டு
பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அப்படி எண்ணற்ற பணிகளை ஒசூர் பகுதியிலே
நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
மேலும் அதிகம் படித்தவர்கள் உள்ள இந்த பகுதியிலே
ரூ.3 கோடி மதிப்பில்
ஒரு நுலகம்
கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த நூலகம் விரைவில் திறக்கப்படும்
என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.
அதேபோல இந்த பகுதியில்
ரூ.88லட்சம் மதிப்பில் பூங்கா
அமைக்கப்பட்டு
முதலமைச்சர் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதையும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
ஆக நாட்டு மக்களுக்கான இந்த ஆட்சி
பெண்களுக்கான ஆட்சி.
ஒசூர் மக்களின் தேவைகளை
நிறைவேற்றுகின்ற ஒரு ஆட்சி.
நாங்கள் செல்லுகின்ற இடமெல்லாம்
மக்கள் எங்கள் மீது காட்டுகின்ற அன்பு,
மக்கள் தருகின்ற வரவேற்பை
பார்க்கும் போது
நமது முதலமைச்சர் 2-வது முறையாக பதவியேற்பது உறுதியாக தெரிகிறது.
ஒசூர் தொகுதியில் போட்டியிடும்
எனக்கு உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும்
எனக்கூறி திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா வாக்கு சேகரித்தார்.
இந்த பரப்புரையின் போது
திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
--------------------------------.