வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
ஊரக வளர்ச்சித்துறை சார்பாக,
ரூ.7 கோடியே 78 லட்சத்து 53 ஆயிரம்
மதிப்பில் நடைபெற்று வரும்
வளர்ச்சித் திட்ட பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணகிரி. மே. 26. –
பொதுமக்களின் நீண்ட நாள்
கோரிக்கையினை ஏற்று
சமூக பொறுப்பு நிதியிலிருந்து,
ரூ.91லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும்
தடுப்பணை பணிகள் தற்போது
80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
தம்மண்டரப்பள்ளி
நாச்சிக்குப்பம்
மற்றும்
சென்னச்சந்திரம்
ஊராட்சிகளில்,
ஊரக வளர்ச்சித்துறை சார்பாக,
ரூ.7 கோடியே 78 லட்சத்து 53 ஆயிரம்
மதிப்பில் நடைபெற்று வரும்
வளர்ச்சித் திட்ட பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (26.05.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
தம்மண்டரப்பள்ளி ஊராட்சி,
பன்னப்பள்ளி கிராமத்தில்
கட்டப்பட்டு வரும்
தடுப்பணை பணிகளை
பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
S.F.எண்.116-ல் அமைந்துள்ள
குப்தா ஆற்றின் குறுக்கே
2014 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தடுப்பணை
தற்போது முற்றிலும் சேதமடைந்து,
பயன்பாடற்ற நிலையிலும் மேலும் சீரமைக்க இயலாத நிலையிலும் இருந்தது.
இதனால், அதே பகுதியில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என
சுற்றுவட்டார பொதுமக்கள்
நீண்ட நாட்களாக கோரிக்கை
வைத்ததையடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரையின் பேரில்,
ஓசூரில் அமைந்துள்ள
Schaeffler India நிறுவனம் தனது
2026 - ஆம் ஆண்டிற்கான
நிறுவன சமூக பொறுப்பு (CSR)
திட்டத்தின் கீழ்,
ரூ.91 லட்சம் இத்தடுப்பணை பணிக்கான
நிதியை வழங்கியுள்ளது.
தற்போது இத்திட்டப் பணிகள்
அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
இந்தத் திட்டத்தை
Biota Soil Foundation நிறுவனம்
திட்ட செயலாக்க முகமையாக
செயல்பட்டு வருகிறது.
இத்தடுப்பணை
25 மீட்டர் நீளமும்
2.5 மீட்டர் உயரமும்
கொண்டதாக அமைக்கப்படுகிறது.
இதன் முழுக் கொள்ளளவு
சுமார் 19,900 கன மீட்டர்
(சுமார் 2 கோடி லிட்டர்) ஆகும்.
மேலும்,
தண்ணீர் தேங்கும் பரப்பு
சுமார் 3.8 ஏக்கராகவும்,
நீர் நிரம்பும் நீளம்
சுமார் 520 மீட்டராகவும் இருக்கும்.
இத்தடுப்பணை பணிக்குத் தேவையான
அனைத்து தொழில்நுட்ப
ஆலோசனைகளையும்
கிருஷ்ணகிரி மாவட்ட
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு
முகமை
வழங்கி வருகிறது.
தற்போது வரை சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இத்தடுப்பணையை சுற்றி மரக்கன்றுகள்
நடவு செய்ய
மாவட்ட ஆட்சித்தலைவர்
அறிவுரை வழங்கினார்.
இத்தடுப்பணை மூலம்
தம்மண்டரப்பள்ளி,
திம்மசந்திரம்,
பன்னப்பள்ளி,
நாச்சிக்குப்பம்
கங்கமடுவு
உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில்
உள்ள சுமார் 30 திறந்தவெளி கிணறுகளும்,
400-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும்
நேரடியாக நிலத்தடி நீர்மட்ட உயர்வால் பயனடையும்.
இதன் மூலம் பாசன வசதி மேம்பட்டு,
விவசாய நிலங்களில் ஈரப்பதம் நிலைநிறுத்தப்படும்.
மேலும், விவசாய சாகுபடி பரப்பளவு அதிகரிப்பதற்கும்,
இருபோக சாகுபடியை
ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம்
பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
மேலும்,
சுற்றியுள்ள கிராமங்களின்
கால்நடைகளுக்கு
குடிநீர் வசதி கிடைக்கும்.
மண் அரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு,
மண் வளம் மேம்படும்.
நீர்நிலைகளில் வண்டல் மண்
தடுக்கப்படும்.
இத்தடுப்பணை பணி
அனைத்து விவசாயிகளிடமும்
மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து,
சென்னச்சந்திரம் ஊராட்சி,
பேட்டப்பனூர் கிராமத்தில்,
இருளா இன மக்களுக்கு,
பாரத பிரதமர் ஜன்மான் திட்டம்
2024-2025 -ன் கீழ்,
தலா ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் வீதம்
மொத்தம் 14 வீடுகள்
ரூ.70 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில்
கட்டப்பட்டு வரும் புதிய வீடுகள்
கட்டுமான பணிகளை பார்வையிட்டு,
இக்குடியிருப்பு பகுதிகளில்
தெருவிளக்கு,
மின்சாரம்,
குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
அமைத்து தரப்படும் என
பயனாளிகளிடம் தெரிவித்தார்.
மேலும்,
15 -வது நிதி ஆணையத்தின்
சுகாதாரம் மற்றும் தூய்மை திட்டம்
2025-2026 -ன் கீழ்,
ரூ.50 லட்சம் மதிப்பில்
புதியதாக கட்டப்பட்டு வரும்
துணை சுகாதார நிலையத்தில்
மருத்துவர் அறை,
வெளிப்புற நோயாளிகள்
சிகிச்சை அறை,
மருந்தகம்
அமைக்கப்பட்டுள்ளதை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
சென்னச்சந்திரம் ஊராட்சியில்,
மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதி திட்டம் 2025-2026 -ன் கீழ்,
ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில்
வசவராயன்கோயில்
அரசு புறம்போக்கு நிலத்தில்
மாபெரும் மரக்கன்றுகள் நடவு
செய்யப்பட்டுள்ளதைபார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
இப்பகுதியில்
கொற்றை,
சம்புநாவல்,
வேம்பு,
மகாகனி,
புங்கன்
உள்ளிட்ட 500 மரக்கன்றுகள்
நடவு செய்யப்பட்டு
பராமரிக்கப்பட்டு வருகிறது.
இச்செடிகளின் தண்ணீர் தேவைக்காக
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
புதிய ஆழ்துளை கிணறு
அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மின்மோட்டார்
பொறுத்துவதற்காக
சென்னச்சந்திரம் ஊராட்சி
பொது நிதியிலிருந்து
ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போதிய மின்கம்பங்கள் அமைத்து,
மின்மோட்டாருக்கு தேவையான
மின்சார வசதி ஏற்படுத்தி
செடிகளுக்கு தடையின்றி
தண்ணீர் பாய்ச்சி
சிறப்பான முறையில்
பராமரிக்கப்படும்.
அதேப்போல் தம்மண்டரப்பள்ளி,
நாச்சிக்குப்பம் மற்றும் சென்னச்சந்திரம்
ஊராட்சிகளில் ரூ.7 கோடியே 78 லட்சத்து
53 ஆயிரம் மதிப்பில்
நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகளை
தரமாகவும், விரைந்து முடித்து
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
வழங்க வேண்டும் என
பொறியாளருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
உதவி செயற்பொறியாளர்கள்
திரு.சம்பத்
(சாலை மற்றும் மேம்பாலம்),
திரு.சுப்ரமணி
(கட்டுமானம்),
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.குமரேசன்,
திருமதி.சாவித்ரி,
உதவி பொறியாளர்கள்
திரு.மணிவண்ணன்,
திருமதி.தீபமணி,
பணி மேற்பார்வையாளர்கள்
திருமதி.மினி,
திரு.வேலுபிரசாத்,
திரு.நஞ்சாரெட்டி,
திரு.கண்ணன்,
திரு.ஜெயசங்கர்,
Schaeffler India நிறுவன மேலாளர்
(சமூக பொறுப்பு நிதி)
திரு.பரத்,
BiotaSoil பவுண்டேஷன் நிறுவனர்
திரு.செந்தில் முருகன்,
நீர்வடிப்பகுதி திட்ட
உதவி பொறியாளர்
திரு.பால்ராஜ்,
வேப்பனப்பள்ளி
நீர்வடிப்பகுதி பொறியாளர்
திரு.சரவணன்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
----------------------------------------------.