ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
100% வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
ஒசூர் ஆராதனா தன்னார்வ
தொண்டு நிறுவனம்
சார்பில்
புனித ஜோசப் கலை மற்றும்
அறிவியல் மகளிர் கல்லூரியில்,
தேர்தலில் முதல் முறையாக
வாக்களிக்கும் மாணவிகளுக்கு
100% வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ஒசூர். ஏப். 11. –
ஒசூர் செயின்ட் ஜோசப்
கலை மற்றும் அறிவியல்
மகளிர் கல்லூரியில்
முதல் முறையாக வாக்களிக்கும்
மாணவிகளுக்கு விழிப்புணர்வு
ஒசூர் நகரில் உள்ள புனித ஜோசப் கலை மற்றும்
அறிவியல் மகளிர் கல்லூரியில்,
முதல் முறையாக வாக்களிக்கும்
மாணவிகளுக்கு
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து
ஒசூர் ஆராதனா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் – 2026
ஏப்ரல் 23-ம் தேதியன்று
நடைபெறும் தேர்தலில்
100% வாக்களிப்பது குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி
செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல்
மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள்
உறுதி மொழி ஏற்பு
இந்த நிகழ்ச்சியில்
மைதானத்தில் ஆங்கில கோவில் எழுத்தால்
எழுதி அதில் அனைத்து மாணவிகளும்
நின்று கொண்டு நாங்கள்
முதல் முறை வாக்களிப்போம்
என்று கூறி
சந்தோஷமாக உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியை
ட்ரோன் கேமரா மூலம் படம்
பிடிக்கப்பட்டது.
இந்த 100% முதல் முறை வாக்களிக்கும்
விழிப்புணர்வு முகாமை
ஓசூர் ஆராதனா அறக்கட்டளை
நிறுவன தலைவி ராதா
அவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஏற்பாட்டு செய்திருந்தார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்
திருமதி. சக்தி சுபாஷினி,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திருமதி. ராகவி,
செயின்ட் ஜோசப் மகளிர்
கல்லூரி முதல்வர்
Dr.சோலின் ரோஸ்,
செகரட்டரி
Dr. டோரா கிரேசி ஜெயசீலி,
பேராசிரியர்கள்
திருமதி. மீனாட்சி,
திருமதி. லின்சி சலஸ்தீனா,
திருமதி. சௌமியா.
மற்றும் முதல் முறை வாக்களிக்கும்
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா
------------------------------------.