கிருஷ்ணகிரி வட்டார
போக்குவரத்து எல்லைக்குட்பட்ட
60 தனியார் பள்ளிகளின்
1,133 பள்ளி வாகனங்களின்
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் ஆய்வு.
கிருஷ்ணகிரி. மே. 19. -
மாவட்ட ஆட்சித்தலைவர்
எச்சரிக்கை
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள்
போதைப் பொருட்களை உட்கொண்டு
வாகனத்தை இயக்கினால்
சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு
வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் பணி
செய்யாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்,
கிருஷ்ணகிரி வட்டார
போக்குவரத்து துறை சார்பாக,
தனியார் பள்ளி வாகனங்களின்
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும்
பராமரிப்பு பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (19.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து
அலுவலக வரையறைக்குட்பட்ட,
கிருஷ்ணகிரி,
வேப்பனப்பள்ளி,
பர்கூர்
காவேரிப்பட்டிணம்
பகுதிகளில் இயங்கி வரும்
60 தனியார் பள்ளிகளில் உள்ள
1,133 பள்ளி பேருந்துகளை,
தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள்
2012-ன்படி இயக்கப்படுகின்றனவா என
வருவாய் கோட்டாட்சியர்,
வட்டார போக்குவரத்து அலுவலர்,
துணை காவல் கண்காணிப்பாளர்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
மோட்டார் வாகன ஆய்வாளர்கள்
அடங்கிய ஆய்வு கமிட்டிகளுடன்
இன்று முதல் ஆய்வு செய்யப்பட உள்ளது.
முதல் கட்டமாக இன்று 325 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள பள்ளி வாகனங்கள்
தொடர்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும், 1,022 பேருந்துகளுக்கு தகுதி சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள 111 பள்ளி பேருந்துகளை
ஆய்வு செய்து தகுதி சான்று
வழங்கப்பட உள்ளது.
இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில்
முதலுதவி பெட்டி,
தீயணைப்பு கருவி,
அவசரகால வழி,
வேக கட்டுப்பாடு
மற்றும்
வாகன ஆவணங்கள்
முறையாக பராமரிப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளி திறப்பதற்குள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார்
பள்ளி வாகனங்களும் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
தணிக்கை மேற்கொள்ளாத வாகனங்களை கட்டாயமாக இயக்க கூடாது.
மேலும், பள்ளி வாகனங்களில்
அவசர காலங்கள்
அல்லது
அசாதாரண சூழ்நிலைகளில்
மாணவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள
அவசரகால பொத்தான்
(Panic Buttons)
பள்ளி வாகனங்களில்
பொருத்தப்பட வேண்டும்.
குழந்தைகள் வாகனங்களில்
பாதுகாப்பாக ஏறும் பொழுது படிகட்டுகள் மற்றும்
தரைதளம் சரியான அளவு
இருக்கின்றதா என
அளவீடு செய்யப்பட வேண்டும்.
வாகனங்களில் இருபுறமும்
பள்ளிகளின் பெயர்கள்,
முகவரிகள் மற்றும்
தொலைபேசி எண்கள்,
கைபேசி எண்கள்
கட்டாயம் எழுத்தப்பட்டு
இருக்க வேண்டும்.
மேலும், வாகன ஓட்டுநர்கள்
தங்களுடைய வாகனத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
வாகனங்களில் சிறு பழுது ஏற்பட்டாலும்
அதனை உடனடியாக பழுது நீக்கம்
செய்ய வேண்டும்.
டீசல் பில்டர்கள்,
பிரேக் லைன்கள் பழுது ஏற்பட்டால்
உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு
தகவல் தெரிவித்து
சீர்செய்ய வேண்டும்.
பள்ளி நிர்வாகம் பழுதுகளை
நீக்கவில்லை என்றால்
வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு
தகவல் தெரிவிக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் வாகனத்தை
ஒரு கோவிலாக பராமரிக்க வேண்டும்.
நகர்புறம் அல்லது நெடுஞ்சாலைகளில் வாகனத்தை இயக்கும் போது
நிர்ணயிக்கப்பட்ட
60 கி.மீட்டருக்குமேல்
வேகமாக செல்ல கூடாது.
பெற்றோர்கள் உங்களை நம்பி
வாகனங்களில் குழந்தைகள் செல்ல அனுமதிப்பதால்,
மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.
மேலும்,
வாகன ஓட்டுநர்கள்
போதைப் பொருட்களை
உட்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது.
அவ்வாறு இயக்கினால்,
அவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை
மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும்
ஓட்டுநர் பணி செய்யாதபடி
நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே வாகன ஓட்டுநர்கள்
மாணவ, மாணவியர்களை
வீட்டிலிருந்து பள்ளிக்கும்,
பள்ளியிலிருந்து வீட்டிற்கும்
பாதுகாப்பாக கொண்டு செல்வது
உங்கள் தலையாய கடமையாகும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில்
அவசரகால வழி,
முதலுதவி பெட்டி,
உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
தீயணைப்பு துறையினர் மூலம்
தீ விபத்தின் போது ஓட்டுநர்கள்
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
குறித்த செய்முறை விளக்கம்
அளிக்கப்பட்டதையும்,
108 ஆம்புலன்ஸ் குழுவினர்கள்
விபத்தின் போது மேற்கொள்ள
வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள்
குறித்த செய்முறை விளக்கம் செய்து, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டதையும் பார்வையிட்டு,
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு
சாலை விதிகள் கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இவ்வாய்வின் போது,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.நா.ஷாஜகான்,
கிருஷ்ணகிரி
வட்டார போக்குவரத்து அலுவலர்
திரு.ஈஸ்வர மூர்த்தி,
மோட்டார் வாகன ஆய்வாளர்
திரு.செந்தில் குமார்,
மெட்ரிக் கல்வி அலுவலர்
திரு.கோபாலப்பா,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
தீயணைப்பு துறை நிலைய அலுவலர்
திரு.அந்தோணிசாமி
மற்றும் காவல் துறையினர்,
தீயணைப்பு துறையினர்,
108 ஆம்புலன்ஸ் குழுவினர்
கலந்து கொண்டனர்.
------------------------------------------.