"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்- 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள
ஊடக சான்றளிப்பு
மற்றும்
கண்காணிப்பு மையம்
மற்றும்
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
ஆகியவற்றை
தேர்தல் செலவின பார்வையாளர்கள்
இன்று (07.04.2026) நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி. ஏப். 07. –
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள
ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை
சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள்
திரு.சந்தோஷ்குமார்
I.R.S
(51. ஊத்தங்கரை (தனி)
மற்றும் 52. பர்கூர்)
மற்றும்
திரு.D.சதீஸ் I.R.S
(53. கிருஷ்ணகிரி மற்றும்
54. வேப்பனஹள்ளி)
ஆகியோர் இன்று (07.04.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில்
ஊடக சான்றளிப்பு
மற்றும்
கண்காணிப்பு மையம்
அமைக்கப்பட்டு,
உள்ளூர் தொலைக்காட்சி ஒளிப்பரப்புகள்
பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இன்று (07.04.2026)
51. ஊத்தங்கரை (தனி) மற்றும்
52. பருகூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட
தேர்தல் செலவின பார்வையாளர்
திரு.சந்தோஷ்குமார்
I.R.S
அவர்கள் மற்றும்
53. கிருஷ்ணகிரி மற்றும்
54. வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்
திரு.D.சதீஸ் I.R.S
ஆகியோர் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை
நேரில் பார்வையிட்டு,
24 மணிநேரமும் தொலைக்காட்சியில்
பதிவு செய்யும் பணிகள்,
சமூக வலைதளங்களை கண்காணித்து
பதிவு செய்யும் பணிகள்,
செய்திதாள்களில் வரப்பெறும்
வேட்பாளர்களின் விளம்பரங்கள்
குறித்த விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து,
தேர்தல் செலவின பார்வையாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில்
24 மணிநேரமும் செயல்பட்டு வரும்
தேர்தல் கட்டுப்பாட்டு அறையை
நேரில் பார்வையிட்டு,
தொலைபேசி வாயிலாக
வருகை தரும் புகார்கள்,
C-VIGIL APP வாயிலாக வரபெறும்
புகார்கள் குறித்து
கண்காணிக்கப்பட்டு வரும் விவரங்கள்,
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள
ஜிபிஆர்எஸ் இணையதளம் மூலம்
மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும்
நிலை கண்காணிப்பு குழுவினர்
வாகன தணிக்கை செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாயின்போது,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கிருஷ்ணன்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சம்பத்து
(தேர்தல்),
திரு.வெங்கடேசன்
(தேர்தல் கட்டுப்பாட்டு அறை)
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
------------------------------------------.