வாக்குகள் எண்ணும் பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
ஆறு சட்டமன்ற தொகுதிகளில்
பதிவான வாக்குகள்
எண்ணும் பணியில் ஈடுபடும்
408 அலுவலர்களுக்கான
சமவாய்ப்புக்கு உட்படுத்துதல்
(Counting Personnel Randomization)
தேர்தல் பார்வையாளர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
6 தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில்
வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது
மாவட்டதேர்தல்நடத்தும்அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 2. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
6 தேர்தல் பார்வையாளர்கள்
முன்னிலையில்
வாக்கு எண்ணும் பணிகள்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளில்
பதிவான வாக்குகள் வரும் 04.05.2026 அன்று
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப
கல்லுாரியில் எண்ணப்படவுள்ளதையடுத்து,
வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கான
சமவாய்ப்புக்கு உட்படுத்துதல்
(Counting Personnel Randomization)
(51-ஊத்தங்கரை (தனி)
தேர்தல் பார்வையாளர்
திரு.விபின் குமார் ராய்
அவர்கள்,
(52-பர்கூர்),
தேர்தல் பார்வையாளர்
திரு.அனில் குமார் சிங் இ.ஆ.ப.,
அவர்கள்,
(53-கிருஷ்ணகிரி)
தேர்தல் பார்வையாளர்
திரு.சௌரவ் பாபு சிங்ஹால் இ.ஆ.ப.,
அவர்கள்,
(54-வேப்பனஹள்ளி),
தேர்தல் பார்வையாளர்
திரு.ஜெயந்திர குமார் விஜய்வாட்
அவர்கள்,
(55-ஓசூர்)
தேர்தல் பார்வையாளர்
திரு.பண்வே ராகுல் துக்காராம் இ.ஆ.ப.,
அவர்கள்,
(56-தளி)
தேர்தல் பார்வையாளர்
திரு. முகேஷ் குமார் மீனா
அவர்கள் மற்றும்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர் தலைமையில் இன்று (02.05.2026) நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 நடைபெற்றதையடுத்து,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள
2,093 வாக்கு சாவடி மையங்களில்
பதிவான வாக்குகள்
எதிர் வரும் 04.05.2026 அன்று
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப
கல்லூரி வளாகத்தில்
வாக்கு எண்ணிக்கை
நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிகையில்
பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான
சமவாய்ப்புக்கு உட்படுத்துதல்
(Counting Personnel Randomization)
தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்
முன்னிலையில் இன்று நடைபெற்றது.
51.ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் உள்ள
319 வாக்கு சாவடிகளில்
பதிவான வாக்குகள்,
14 மேஜைகளில் 23 சுற்றுகளாகவும், எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள
மின்னனு வாக்கு பதிவு இயந்திர மேற்பார்வையாளர்கள் 14 நபர்களும், உதவியாளர்கள் 14 நபர்களும், நுண்பார்வையாளர்கள் 14 நபர்களும்,
தபால் வாக்கு மேற்பார்வையாளர்கள், 4 நபர்களும், தபால் வாக்கு உதவியாளர்கள் 8 நபர்களும், தபால் வாக்கு நுண்பார்வையாளர்கள் 4 நபர்களும், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 5 நபர்கள் என மொத்தம் 63 நபர்களும்,
52.பர்கூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள
324 வாக்கு சாவடிகளில்
பதிவான வாக்குகள்,
14 மேஜைகளில் 23 சுற்றுகளாகவும், எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள
மின்னனு வாக்கு பதிவு இயந்திர மேற்பார்வையாளர்கள் 14 நபர்களும், உதவியாளர்கள் 14 நபர்களும், நுண்பார்வையாளர்கள் 14 நபர்களும்,
தபால் வாக்கு மேற்பார்வையாளர்கள், 4 நபர்களும், தபால் வாக்கு உதவியாளர்கள் 8 நபர்களும், தபால் வாக்கு நுண்பார்வையாளர்கள் 4 நபர்களும், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 5 நபர்கள் என மொத்தம் 63 நபர்களும்,
53.கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள
340 வாக்கு சாவடிகளில்
பதிவான வாக்குகள்,
14 மேஜைகளில் 24 சுற்றுகளாகவும், எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள
மின்னனு வாக்கு பதிவு இயந்திர மேற்பார்வையாளர்கள் 14 நபர்களும், உதவியாளர்கள் 14 நபர்களும், நுண்பார்வையாளர்கள் 14 நபர்களும்,
தபால் வாக்கு மேற்பார்வையாளர்கள், 6 நபர்களும், தபால் வாக்கு உதவியாளர்கள் 12 நபர்களும், தபால் வாக்கு நுண்பார்வையாளர்கள் 6 நபர்களும், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 7 நபர்கள் என மொத்தம் 73 நபர்களும்,
54.வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் உள்ள
343 வாக்கு சாவடிகளில்
பதிவான வாக்குகள்,
14 மேஜைகளில் 25 சுற்றுகளாகவும், எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள
மின்னனு வாக்கு பதிவு இயந்திர மேற்பார்வையாளர்கள் 14 நபர்களும், உதவியாளர்கள் 14 நபர்களும், நுண்பார்வையாளர்கள் 14 நபர்களும்,
தபால் வாக்கு மேற்பார்வையாளர்கள், 6 நபர்களும், தபால் வாக்கு உதவியாளர்கள் 12 நபர்களும், தபால் வாக்கு நுண்பார்வையாளர்கள் 6 நபர்களும், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 7 நபர்கள் என மொத்தம் 73 நபர்களும்,
55.ஓசூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள
446 வாக்கு சாவடிகளில்
பதிவான வாக்குகள்,
14 மேஜைகளில் 32 சுற்றுகளாகவும், எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள
மின்னணு வாக்கு பதிவு இயந்திர மேற்பார்வையாளர்கள் 14 நபர்களும், உதவியாளர்கள் 14 நபர்களும், நுண்பார்வையாளர்கள் 14 நபர்களும்,
தபால் வாக்கு மேற்பார்வையாளர்கள் 6 நபர்களும், தபால் வாக்கு உதவியாளர்கள் 12 நபர்களும், தபால் வாக்கு நுண்பார்வையாளர்கள் 6 நபர்களும், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 7 நபர்கள் என மொத்தம் 73 நபர்களும்,
56. தளி சட்டமன்ற தொகுதியில் உள்ள
321 வாக்கு சாவடிகளில்
பதிவான வாக்குகள்,
14 மேஜைகளில் 23 சுற்றுகளாகவும், எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ள
மின்னனு வாக்கு பதிவு இயந்திர மேற்பார்வையாளர்கள் 14 நபர்களும், உதவியாளர்கள் 14 நபர்களும், நுண்பார்வையாளர்கள் 14 நபர்களும்,
தபால் வாக்கு மேற்பார்வையாளர்கள்,
4 நபர்களும், தபால் வாக்கு உதவியாளர்கள்
8 நபர்களும், தபால் வாக்கு
நுண்பார்வையாளர்கள் 4 நபர்களும்,
கூடுதல் உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்கள் 5 நபர்கள்
என மொத்தம் 63 நபர்களும்,
என மொத்தம் 408 வாக்கு எண்ணிகையில்
ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு
சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் பணி
இன்று நடைபெற்றது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
திருமதி.அபிநயா,
திருமதி.கீதாராணி,
திரு.சிவகுமார்,
திரு.பழனி,
மாவட்ட ஆட்சியர்
நேர்முக உதவியாளர் (தேர்தல்)
திருமதி.ஜெ.ஹெலன் ராணி,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சம்பத்து (தேர்தல்),
ஆகியோர் கலந்து கொண்டனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
-------------------------------------------.