கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஜனவரி - 2026 முதல் நாளது வரை
அனுமதியின்றி கனிமவள
பொருட்கள் எடுத்து சென்ற
95 வாகனங்களை வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும்
காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கனிமங்கள்
வெட்டியெடுக்கப்பட்ட
5 சாதாரண கற்குவாரிகள் மற்றும்
2 கிரானைட் குவாரிகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 29. -
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
சட்டம் ஒழுங்கு,
சாலை பாதுகாப்பு மற்றும்
மாவட்ட அளவிலான
மணல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
(29.05.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து
கல்குவாரிகளில் சோதனை நடத்தி
அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக
கற்கள் வெட்டியெடுக்கப்படும்
கற்குவாரிகளை உடனடியாக மூடவும்,
அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக
அபராதம் வசூலிக்க கனிமவளத்துறை அலுவலர்களுக்கு
மாண்புமிகு கனிமவளத்துறை அமைச்சர்
அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
குத்தகை காலம் முடிவுற்று கைவிடப்பட்ட
குவாரிகள் மற்றும்
குத்தகை உரிமம் வழங்கப்படாத பகுதிகளில்
சட்டவிரோதமாக கனிமங்கள்
வெட்டியெடுக்கப்படும்
குவாரிகளில் வருவாய்த்துறை,
கனிமவளத்துறை மற்றும்
காவல்துறையினர் மூலம்
உரிய வாகன தணிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி,
ஜனவரி 2026 முதல் நாளது வரை
95 வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு
உரிய மேல்நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு கூட்டத்தில்
அரசு அனுமதி பெறாமல் இயங்கும்
குவாரிகள், குத்தகை காலம் முடிவுற்ற பின்பும்
தொடர்ந்து இயங்கும் குவாரிகள்,
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல்
இயங்கும் குவாரிகள்,
சேமிப்பு கிடங்கு மற்றும்
மாசு கட்டுப்பாட்டு வாரிய
அனுமதி பெறாமல் இயங்கும் கிரஷர்கள்
கண்டறியப்பட்டு
உரிய அபராதம் மற்றும் குற்றவியல்
நடவடிக்கை மேற்கொள்ளவும்,
குவாரி பகுதியில் அனுமதித்த
அளவைவிட அதிக ஆழம்
வெட்டியெடுப்பதை கண்டறிந்து
நடவடிக்கை மேற்கொள்ளவும்
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குவாரி பணியில் பயன்படுத்தும்
வெடிபொருட்களை
வேறு பயன்பாட்டிற்கு
பயன்படுத்தப்படுகின்றனவா
என்பதை கண்டறிந்து
நடவடிக்கை எடுக்கவும்,
குவாரி பகுதியில் பாறை சரிந்துவிழும்
நிலையில் உள்ள அபாயகரமான
குவாரிகளை கண்டறிந்து
உரிமம் ரத்துசெய்யவும்,
ஒருநடை சீட்டினை பயன்படுத்தி
ஒன்றுக்குமேற்பட்ட முறை
வாகனங்களின் மூலம்
கனிமம் எடுத்துச்செல்வதை
தடுக்கும்பொருட்டு
உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளவும்,
50% பசுமை வரி செலுத்தாமல்
அண்டை மாநிலங்களுக்கு
கனிமங்களை எடுத்து செல்லும்
வாகனங்கள் மீது அபராதம் மற்றும்
குற்றவியல் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அமைந்துள்ள கற்குவாரிகளை
கனிமவளத்துறை அலுவலர்களால்
சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது
முதற்கட்ட சோதனை
நடத்தப்பட்டதில்
05 சாதாரண கற்குவாரிகளும்
(தேன்கனிக்கோட்டை வட்டம் -2,
சூளகிரி வட்டம் -1, ஒசூர் வட்டம்- 1
கிருஷ்ணகிரி வட்டம் -1)
மற்றும்
02 கிரானைட் குவாரிகளும்
(பர்கூர் வட்டம் -2) என மொத்தம்
07 குவாரிகளில் அனுமதியின்றி
கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
எனவே, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்ட காரணத்திற்காக,
மேற்கண்ட 07 குவாரிகள் தற்காலிகமாக
மூட உத்தரவிடப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கிருஷ்ணன்,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திரு.அமீர் பாஷா,
உதவி இயக்குநர் (ஆயம்)
திரு.பழனி,
உதவி இயக்குநர் (கனிமவளம்)
திரு.ர.இளங்கோவன்,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திரு.சி.வேலுமணி.
மற்றும்
துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------.