உயர்கல்வி சேர்க்கை
கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உயர்கல்வி பயிலுதல் குறித்து ஏற்படும்
சந்தேகங்களுக்கு மாணவர்கள்
9750982553, 8682925404, 04343-234444
மற்றும்
1077 ஆகிய எண்களில்
அனைத்து வேலை நாட்களிலும்
தொடர்பு கொண்டு விவரங்களை
அறிந்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. 08. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
முதல் தளத்தில்,
பொதுத் தேர்வு எழுதிய
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
உயர்கல்வி சேர்க்கைக்கு
வழிகாட்டும் வகையில்
அமைக்கப்பட்டுள்ள
கட்டுப்பாட்டு அறையை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள், இன்று (08.06.2026)
துவக்கி வைத்து,
உயர்கல்வி சேர்க்கை குறித்து
குழு உறுப்பினர்களுக்கு
அறிவுரை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
பொதுத்தேர்வு எழுதி,
பன்னிரெண்டாம் வகுப்பு
தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு
உயர்கல்வி சேர்க்கைக்கு
வழிகாட்டும் வகையில்
கட்டுப்பாட்டு அறைகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளம்
மற்றும்
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள
மாவட்ட திட்ட அலுவலகத்தில்
செயல்பட்டு வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறை மூலம்
உயர்கல்வி சேரும் மாணவர்கள்
பெற்றோர் இருவரும் அற்ற மாணவர்கள்,
ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள்,
மாற்றுத்திறனாளி மாணவர்கள்,
அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள்,
உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு
தேவைப்படும் மாணவர்கள்,
உடல்நிலை சரியில்லாத காரணத்தால்,
பெற்றோர்கள் விருப்பமின்மையால்
மற்றும் சமூக காரணங்களால்
உயர் கல்வி செல்ல இயலாத மாணவர்கள்,
சான்றிதழ்கள் (சாதிசான்றிதழ், இருப்பிட சான்று, ஆதார் அட்டை திருத்தம்) பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
எனவே,
உயர்கல்வி பயிலுதல் குறித்து
ஏற்படும் சந்தேகங்களுக்கு
மாணவர்கள்
9750982553, 8682925404,
04343-234444 மற்றும் 1077
ஆகிய எண்களில்
அனைத்து வேலை நாட்களிலும்
தொடர்பு கொண்டு விவரங்களை
அறிந்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கிருஷ்ணன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன்குமார்,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
திரு.முருகேசன்,
மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்
திரு.பன்னீர்செல்வம்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்,
தனி வட்டாட்சியர்
(பேரிடர் மேலாண்மை)
திரு.வெங்கடேசன்
மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்
திருமதி.கௌசர்,
உதவி திட்ட அலுவலர்
திரு.மகேந்திரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.