கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
குருபரப்பள்ளி ஊராட்சி,
போடரபள்ளி கிராமத்தில்,
தேசிய கால்நடை நோய்
தடுப்புத் திட்டத்தின் கீழ்,
9 வது சுற்று கோமாரி நோய்
தடுப்பூசி முகாமை
கால்நடை பராமரிப்புத்துறை
மண்டல இணை இயக்குநர்
மரு.மோகன்குமார்
மற்றும்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு.பா.முகுந்தன்
ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 01. -
கோமாரி நோய்
தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
குருபரப்பள்ளி ஊராட்சி,
போடரபள்ளி கிராமத்தில்,
தேசிய கால்நடை நோய்
தடுப்புத் திட்டத்தின் கீழ்,
9 வது சுற்று கோமாரி நோய்
தடுப்பூசி முகாமை
கால்நடை பராமரிப்புத்துறை
மண்டல இணை இயக்குநர்
மரு.மோகன் குமார்
மற்றும்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு.பா.முகுந்தன்
ஆகியோர் (01.07.2026) துவக்கி வைத்து,
கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
3 இலட்சத்து 36 ஆயிரத்து 800
மாட்டின கால்நடைகளுக்கு
தேசிய கால்நடை
நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ்,
9 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
(01.07.2026) கிருஷ்ணகிரி ஒன்றியம்
குருபரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட
போடரபள்ளி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற முகாமில்
200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மேலும்,
இந்த தடுப்பூசி முகாமானது
ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை
ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து கிராமங்களிலும்
அறிவிக்கப்பட்ட தேதிகளில்
கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.
இந்த முகாம்களுக்கு வரும் கால்நடை
உரிமையாளர்கள் தங்களின்
ஆதார் எண்
மற்றும்
செல்போன் எண்
ஆகியவற்றை கண்டிப்பாக தடுப்பூசி
குழுவினரிடம் வழங்க வேண்டும்.
பின்னர் கால்நடைகளுக்கு
காது வில்லைகள்
அணிவிக்கப்பட்டவுடன்
தடுப்பூசி போடப்படும்.
எனவே,
கால்நடை வளர்ப்போர் மேற்படி
தடுப்பூசியை தங்கள் கால்நடைகளுக்கு
போட்டுக் கொண்டு பயன்பெறலாம் என
கால்நடை பராமரிப்புத்துறை
மண்டல இணை இயக்குநர்
மரு.மோகன் குமார்
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஆவின் பொது மேலாளர்
திரு.சிவக்குமார்,
உதவி இயக்குநர்கள்
மரு.மகேந்திரன்,
மரு.ரவிச்சந்திரன்
மற்றும்
கால்நடை உதவி மருத்துவர்கள்
மரு.அன்பழகி,
மரு.அசோக்குமார்,
மரு.வசந்த்,
மரு.கௌசல்யா
மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------.